வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி

2 Min Read

புதுடில்லி, ஜன. 10- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த  பன்னாட்டு பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி. செய்யப் பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரிடம் ஒமிக்ரான் துணை வகை கரோனா கண்டறியப்பட்டு இருப் பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சீனா உள்பட சில உலக நாடு களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா மாறுபாடு வைரசால் கொத்து கொத்தாக மக்கள் உயிரி ழப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை கரோனா தற்போது வேகம் காட்ட தொடங்கி உள்ளது. ஆனால், அங்குள்ள  உண்மை நிலவரத்தை சீனா தெரிவிக்க மறுத்து வருகிறது. 

இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 இறுதியில், இந்தியாவிலும் தொற்று பரவலை தடுக்க மீண்டும் சில கட்டுப்பாடுகள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அறி விக்கப்பட்டன. 

அதன்படி, சீனா, ஜப்பான் ,தைவான் ,தென்கொரியா உள்பட 6 நாடுகளில் இருந்து  இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  இதில் 11 பேருக்கு ஒமிக்ரான் மாறுபா டான   XBB  வகை கரோனா தொற்று கண்டறி யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.  டிசம்பர் 23 முதல் ஜனவரி 3 வரை  பிற நாடுகளில்   5228க்கும் மேற்பட்ட விமானங் களில் இருந்து  இருந்து இந்தியா வுக்கு 19,227 பன்னாட்டு பயணிக ளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவர் களில் 124 நபர்கள் கோவிட் பாசிட் டிவ் என சோதனையில் தெரியவந் துள்ளது. அனைத்து நோயாளிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவற்றின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப் படுத்தலுக்கு அனுப்பப் பட்டுள் ளன,” இதில் 11 பயணிக ளுக்கு ஒமிக்ரான் மாறுபாடான   XBB  வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்திய மக்களிடையே ஓமிக்ரான் மிகவும் லேசானது என்று நிரூபிக்கப்பட்டதால், அதன் துணை வகைகளும் ஒத்ததாக இருக்கலாம். ஆனால் முன்னெச்ச ரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக் கைகளை பின்பற்ற வேண்டிய அவ சியத்தை அவர்கள் அறிவுறுத்துகி றார்கள். ஓமிக்ரானைத் தவிர வேறு எந்த புதிய மாறுபாட்டையும் கண்காணிப்பதில் இந்தியா கவன மாக இருக்க வேண்டியது அவசியம் என்றும்,  நேர்மறை மாதிரிகளின் மரபணு வரிசைமுறை  XBB  அய் 14 நிகழ்வுகளுடன் மிக முக்கியமான ஓமிக்ரான் துணை மாறுபாடாக வெளிப்படுத்தி வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *