இந்தப் பேரணியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு அந்தப் பேரணி பற்றி தெரியாது. நான் வேறு சில வேலைகளில் மும்முரமாக இருந்தேன். யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ அவர்க ளெல்லாம் அதில் கலந்து கொண்டிருக் கிறார்கள். நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு எதுவும் தேவையில்லை. எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது. அது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான். அது நாட்டுக்கு நல்லது” என தெரிவித்துள்ளார்.