ஒற்றைப் பத்தி

2 Min Read

எது கலாச்சாரம்?

பாரதீய ஜனதா கட்சி ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவது எல்லாம் பார்ப் பனக் கலாச்சாரம்தான் – சமஸ்கிருதக் கலாச்சாரம்தான்.

இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறலாம்.

பழம் பெருமை வாய்ந்த அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என்று மாற்றினர். பைசாபாத் என்பதை அயோத்தி மாவட்டமாக்கினார்கள். பைசாபாத் மாவட்டம் என்பது பெரிய பகுதி- அதற்கு ஒரு சிற்றூரான அயோத்தியின் பெயரைச் சூட்டினார்கள். கேட்டால் ராமன் பிறந்த ஊர் என்பது அவர்களின் திரிபுவாதம்.

முகல்சாராய் என்ற பகுதிக் குத் தீனதயாள் உபாத்தியாயா என்ற ஹிந்துத்துவாகாரரின் பெயரினை சூட்டினார்கள். இப்படியே ஒரு நீண்ட பட்டி யல் உண்டு.

ஒன்றிய அரசின் திட்டங் களுக்கு எல்லாம் ஹிந்தி, சமஸ்கிருத பெயர்கள்தான் சூட்டப்படுகின்றன.

140 கோடி மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் மாதந்தோறும் வானொலியில் ஆற்றும் உரைக்குப் பெயர் ‘மன்கிபாத்’ தாம் (மனதின் குரல்!).

நேற்று (29.1.2023) ஏடு களில் வெளிவந்த ஒரு செய்தி- குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரை மாற்றி யிருக்கிறார்கள். சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா? அமிருத தோட்டமாம்! சமஸ்கிருதப் பெயர்!

எவ்வளவுக் கீழ்த்தரமான சிந்தனை! இந்தியா என்பது பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் – இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு.

அந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதி மொழி எடுத்துக் கொண் டவர்கள் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களைக் குடிமக்களாகக் கூட ஏற்றுக்கொள்ளாததோடு, அவர்களின் மொழிகளையும், கலாச்சாரங்களையும் அழித்து வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுகள்தான் மேலே கூறப்பட்டவை . 

அதே நேரத்தில், நேற்று இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது. அதுவும் அவாளின் ‘தினமலர்’ ஏட்டிலேயே வெளி வந்துள்ளது.

சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் மொட் டையன் கோவிலில் குட முழுக்கு நடைபெற்றது. அதனையொட்டி ஊர்வல மாக எடுத்து வரப்பட்ட திரு ஆபரண பெட்டிக்கு தி.புதூர் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர்கள் வரவேற்பு அளித்து, மரியாதை தெரிவித்துள்ளனர். இமாம் தலைமையில் துஆ ஓதினர். பின் சந்தனம், கல்கண்டு, பேரீச்சம் பழம் பரிமாறிக் கொண்டனர்

மனிதநேயம் கொண்ட இந்த இஸ்லாமியர்கள் எங்கே?

தங்கள் கலாச்சாரத்தை மற்ற மதத்தினர்மீது திணிக்கும் பார்ப்பனிய ஹிந்துத்துவா கலாச்சாரம் எங்கே?

சிந்திப்பீர்!

 –  மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *