சென்னை, ஜன. 30- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின் றன. இந்த திட்டப் பணி களை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பூவிருந்தவல் லிக்கும் -பவர் ஹவுஸ்க்கும் இடையிலான வழித் தடத்தை 3 ஆண்டுகளுக்குள் முடித்து, ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. இதுபோல, சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் துக்கான நிலம் கையகப் படுத்தும் பணியும் தீவிர மாகநடைபெற்று வரு கிறது. இதுவரை 82% நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 112.72 ஹெக்டேர் நிலம் தேவை. இவற்றில் 93ஹெக்டேர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீத முள்ள பகுதிகளான காளியம்மன் கோயில் தெரு, வடபழனி, ஆற் காடு சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் கட்டுமானப் பணிக்காக, திட்ட இடத்தை கையகப் படுத்த விரும்புவதால், விரைவில் நிலத்தை கைய கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் அளவு 220 மீட்டராக இருந்தது. இது 2ஆம் கட்டத்தில் 150 மீட்டராக குறைக்கப் பட்டது.
இதேபோல, முதல் கட்டத்தில் உள்ள நிலையங்களில் 4 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் இருக்கின்றன. 2ஆம் கட்டத்தில் இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மட்டுமே கொண்டிருக்கும். முடிந்தவரை தனி யார் நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்கத் திட்டமிட்டு பல முயற்சி களை எடுத்தோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, தனியார் நிலத்தைப் பயன் படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.