அதானி குழுமத்தில் முதலீடு எல்அய்சி, எஸ்பிஅய்க்கு ரூ.78,000 கோடி இழப்பு நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்?

1 Min Read

காங்கிரஸ் கிடுக்கிபிடி

புதுடில்லி, ஜன.31 அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறு வனம் அறிக்கை வெளியிட் டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடிகள் சரிந்தன. அதானி குழுமத்தில் எல்அய்சி மற்றும் எஸ்பிஅய் உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறு வனங்களுக்கும் இழப்பு ஏற்பட் டுள்ளது. 

இந்நிலையில், “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனும், விசாரணை அமைப் புகளும் ஏன் அமைதி காக் கின்றன” என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சுர் ஜேவாலா கேள்வி எழுப்பியுள் ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், “எல்அய்சி ஒரு பொதுத் துறை நிறுவனம். அதில் இருப்பது மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கொண்டு எல்அய்சி, அதானி குழுமத்தில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், இந்த முதலீட்டில் எல்அய்சிக்கு ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர்த்து எல்அய்சியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது. அதேபோல் அதானி குழுமத் துக்கு பொதுத் துறை வங்கி யான எஸ்பிஅய் ரூ.81,200 கோடி கடன் வழங்கியுள்ளது.அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவ்விரு பொதுத் துறை நிறுவ னங்கள் பங்கு மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி சரிந்துள்ளது. 

ஆனால், இத்தகைய சூழ லிலும் மீண்டும் எல்அய்சி ரூ.300 கோடி, எஸ்பிஅய் ரூ.225 கோடி அதானி குழுமத் தில் முதலீடு செய்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஅய் உள்ளிட்ட அமைப்புகளும் ஒன்றிய நிதி அமைச்சகமும் இன்னும் அமைதி காக்கின்றன” என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *