புதுடில்லி இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பு நடத்திய அகில இந்திய கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி பங்கேற்பு

1 Min Read
இந்தியா

திருச்சி, பிப். 7- Rashtrasant Tukdoji Maharaj  நாக்பூர் பல்கலைக்கழகத் தில் 20.01.2023 முதல் 22.01.2023 வரை “Access to Quality & Affordable Medical Products”என்ற மய்யக்கருத்தைக் கொண்டு இந்திய இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பு நடத்திய 72விவது அகில இந்திய கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மருந்தியல் கல்லூரிகள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருந்தியல் நிறுவனங்கள் பங்கு கொண்டு மருந்தியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்தனர். 

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், முனைவர் சு. கற்பகம் குமரசுந்தரி, முனைவர் த.சிறீவிஜயகிருபா, முனைவர் ஆர். ஆனந்தக்குமார், பேரா.க.அ.ச. முகமது ஷபீஃக், பேரா. எஸ். பிரியதர்ஷினி, இள நிலை மருந்தியல் மாணவர்கள் 43 பேர் கலந்து கொண்டனர். இதில் 16 மாணவர்கள் மருந்தி யல் தொடர்பான ஆய்வுக் கட்டு ரைகளை சமர்ப்பித்தனர். 

மேலும் மருந்தியல் தொழிற் சாலைகள் நடத்திய சிறப்பு கண்காட்சியில் மாணவர்கள் மருந்தியல் உபகரணங்கள், இயந் திரங்கள் மற்றும் மருந்தியல் ஆய்வுக்குப் பயன்படும் பல்வேறு தயாரிப்புக்களையும் செய்முறை விளக்கத்துடன் பார்வையிட்டனர். 

23.01.2023 அன்று நாக்பூரி லுள்ள  Lupin Ltd. மருந்தியல் நிறுவனத்தை பார்வையிட்ட னர். இதில் அதிநவீன தொழில் நுட்ப இயந்திரங்களின் உதவியு டன் மருந்து தயாரிப்பு, பேக்கிங் மற்றும் சீல்செய்யும் முறைகள் குறித்து நேரடி விளக்கம் பெற்ற னர். 

இந்தியா முழுவதிலும் உள்ள பல்துறை அறிஞர் பெருமக்கள், மருந்தியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியா ளர்கள் மற்றும் தொழில் நிறுவ னர்கள் பங்கு பெற்று சிறப்பித்த மூன்று நாள் கருத்தரங்க நிகழ் வில் பெரியார் மருந்தியல் கல் லூரியின் பேராசிரியர்கள் மற் றும் மாணவர்கள் கலந்து கொண்டு மருந்தியல் தொடர் பான பன்முகத்திறனைப் பெற்ற னர். நாக்பூரின் முக்கிய பகுதிக ளையும் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த இடங்களையும் மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *