இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவும், வடக்கே சண்டிகர் அதனை ஒட்டிய அரியானா மாநிலங்கள் மட்டுமே பட்டியலில் உள்ளன.
இதில் என்னவியப்பு என்றால் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை கொண்ட புதுச்சேரியும் இந்தப்பட்டியலில் தமிழ்நாட்டோடு சேர்ந்துவிட்டது.
ஆனால் இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் திடீரென புதுசேரியில் தமிழ்நாட்டு பாடத்திட்டம் கூடாது என்று ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைக் இந்த கல்வி ஆண்டில் இருந்தே கொண்டுவந்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டில் புதுச்சேரியும் பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற கல்வியில் பின் தங்கிய மாநிலங்களில் பட்டியலில் வந்து சேர்ந்துவிடும்
வடக்கே பல மாநிலங்களில் அவர்களுக்கு என்று பாடத்திட்டம் இல்லை. ஒன்றிய அரசின் பாடத்திட்டங்களை அப்படியே மாநில அரசின் பாடத்திட்டமாக மாற்றி பயிற்றுவித்து வருகின்றனர்.