வேகா கொல்லை கழகச் செயலாளர் இரா. வேணுகோபால் தாயார் நீலாவதி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு!

1 Min Read
- Advertisement -

கடலூர், நவ.26 கடலூர் மாவட்டம் வேகா கொல்லை திராவிடர் கழக செயலாளர் இரா.வேணுகோபால் தாயார் நீலாவதி அம்மையார் மறைவை ஒட்டி அவரின் நினை வேந்தல் படத்திறப்பு 17.11.2026 அன்று காலை 11 மணி அளவில் வேகாகொல்லை கிழக்குத் தெருவில் மேனாள் ஒன்றிய குழுத் தலைவர் மு.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

முனைவர் துரை.சந்திரசேகரன்

அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து முனைவர் துரை.சந்திரசேகரன்  நினைவுரை ஆற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் அரங்க. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்டச் செயலாளர் எழில் ஏந்தி, மாநகரத் தலைவர் தென் சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், அப்பியம்பேட்டை கோ.வேலு, செந்தில் வேல், தனசேகரன், சத்யா, குணசுந்தரி, நூலகர் கண்ணன், வேகாகொல்லை கிளைத் தலைவர் கதிர்வேல், ஒன்றியத் தலைவர் கனக ராஜ், குறிஞ்சிப்பாடி நகர தலைவர் கனகராஜ், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், வடலூர் நகரச் செயலாளர் குணசேகரன், தங்க.பாஸ்கர் ஆகி யோர் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

கட்டியங்குப்பம் சேகர், சென்னை வீரவேல், பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல் ஆகியோர் நினைவு உரையாற்றினர். நிறைவாக
இரா.ராசதுரை நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *