அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த விவகாரம்! மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் 5 செ.மீ. நீளமுள்ள ஊசியை வைத்து தைத்துள்ளது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சங்கீதாவுக்கு, 2010 செப்டம்பரில் அயனாவரம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் 2-ஆம் மகப்பேறுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் இருந்து வந்துள்ளது.

2022ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உடலை பரிசோதித்த போது அவரது வயிற்றுக்குள் சுமார் 5 செ.மீ. நீளமுள்ள அறுவை சிகிச்சை ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில், தனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கீதா சென்னை உயர் நீதி்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, “மனுதாரரின் வயிற்றுக்குள் இருந்த 5 செ.மீ. நீள முள்ள ஊசி அகற்றப்பட்டு விட்டது. எனினும், மாநகராட்சி மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை புறம் தள்ளிவிட முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு தாக்கீதுப் பிறப்பித்து, விசாரணை நடத்தி 2 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *