செய்யாறு, நவ.14 செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி கிராமத் தில், பேரரசர் அசோகர் கட்டிய பவுத்த விகாரின் மதில் சுவர் அடித்தளம் இருப்பதைத் தொல்லியல் ஆர்வலர் மணிவண்ணன் கள ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட் டம், வெம்பாக்கம் வட்டம், அழி விடைதாங்கி கிராமத்தில் பவுத்த கோட்டை ஒன்று இருந்ததாக இந்தியாவின் முதல் தலைமை நில அளவையாளரான காலின் மெக்கன்சி சேகரித்த தாள் சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் மணிவண்ணன் அண்மை யில் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே நடந்து செல்லும் தொலை வில் சுமார் அரை அடி ஆழத்திற்கு அகழ்வு குழி தோண்டி ஆய்வு செய்ததில், பழங்காலப் பவுத்த கோட்டையின் மதில் சுவர் அடித் தளம் இருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இலக்கிய மற்றும்
வரலாற்றுச் சான்றுகள்
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தொல்லியல் ஆர்வலர் மணி வண்ணன் கூறியதாவது: “சீனாவில் இருந்து தமிழ் நிலப்பகுதிக்கு வந்த பவுத்த துறவியான யுவான் சுவாங், காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பேரரசர் அசோகரால் ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டதாகத் தனது பயணக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அதேபோல், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தில், காஞ்சிபுரத்திற்குத் தென்மேற்கே சோழ மன்னன் இளங்கிள்ளி ஒரு பவுத்த சைத்தியத்தைக் கட்டினான் என்றும், அதிலிருந்த தருமதவனத்தில் மணிமேகலை வாழ்ந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுவான் சுவாங் குறிப்பிட்ட இடம், மணிமேகலை காப்பியம் சுட்டிக்காட்டும் பகுதி மற்றும் காலின் மெக்கன்சி தொகுத்த தாள் சுவடிகளில் கூறப்பட்டுள்ள அழிவிடைதாங்கி பவுத்த கோட்டை ஆகிய மூன்றுமே இந்த ஒரே இடத்தைத்தான் குறிக்கின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது” என்றார்.
