குழந்தைகளின் உலகம் அறிவின் வெளிச்சத்தில் விரியட்டும் குழந்தைகள் நாளில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- குழந்தைகள் நாளையொட்டி, திமுக தலை வரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதி செய்வதுதான். அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங் களைச் செயல்படுத்தினோம்.

அந்தப் பயணத்தின் தொடர்ச்சி யாக, நமது திராவிட மாடல் ஆட்சி யில், ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’, ‘அன்புக்கரங்கள்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘வானவில் மன்றம்’, வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்.

குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப் புடன் துணைநிற்போம். திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *