சிவசேனா கட்சி சின்னம் : தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்கு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி பிப் 21  சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் சிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் சிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின் றனர். ஏக்னாத் சிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராட்டிரா வில் ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்னாத் சிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், மகாராட்டிராவில் சின்ச்வாத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த லக்ஷ் மண் பாண்டுரங்க ஜக்தாப் மறைந் ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள அதே பிப்ரவரி 27ஆம் தேதி சின்ச்வாத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இரு அணியினரும் சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த நிலை யில், ஏக்னாத் சிண்டே தரப்புக்கே அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் அதற்கே வில் அம்பு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 17ஆம் தேதி தனது முடிவை அறிவித்தது.  உண்மையான சிவசேனா ஏக்னாத் ஷிண்டே தலைமையில் இருப்பதுதான் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் இடம் கோரிக்கை வைத்தார். எனினும், அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, வரிசைப்படி சீரான முறையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்றும் வழக்கை உடனடியாக விசார ணைக்கு எடுத்துக்கொள்ள முடி யாது என்றும் கூறினார். 

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படு கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *