தமிழ்நாட்டில் 26 புதிய போக்சோ நீதிமன்றங்கள், போதைப்பொருள் வழக்குகளுக்கான 4 சிறப்பு நீதிமன்றங்கள்! அரசாணை வெளியீடு!

- Advertisement -

சென்னை, நவ. 2- தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத்தர 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

26 புதிய போக்சோ நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க ஏற்கெனவே 22 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 4 நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் ரூ.46.59 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 47 காவல் மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 52 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றங்கள்

அதேபோல, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப் படுத்தவும், அதுசார்ந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் ஏற்கெனவே 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்கு விரைவான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *