கேரள அரசு புதிய கட்டுப்பாடு 23 வயதுக்கு கீழ் மதுபானம் விநியோகிக்கத் தடை

- Advertisement -

திருவனந்தபுரம், அக். 31- கேரளாவில் 23 வயது பூர்த்தியடையாத நபர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வயதை உறுதி செய்ய ஆதார் உள்ளிட்ட அரசு அடையாளச் சான்றுகளைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்று மாநில கலால் துறை ‘பார்’களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வயது குறைவாகத் தோன்றும் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கும் முன் ஆதார் அல்லது வயதை உறுதிப்படுத்தும் வேறு அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும், விதியை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை அமைச்சர் எம். ராஜேஷ் எச்சரித்துள்ளார்.
கொச்சி நெடும்பாசேரியில் மினி கூப்பர் காரை மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய 19 வயது இளைஞர் சுஹைல் சஜீவுக்கு, வயதுச் சான்று எதுவுமின்றி மது விநியோகிக்கப்பட்டதையடுத்து, 23 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் வழங்கும் பார்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசு புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி வருவதாகவும், கேரள உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தபடி, நவம்பர் மாதத்தில் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *