குற்ற வழக்குத் தொடர தேவைப்படும் ஆவணங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க அரசு மறுக்கக்கூடாது! உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

2 Min Read
- Advertisement -

மதுரை, அக். 31- ஆர்டிஅய் தகவல்களை கட்டுப்படுத்தும் விதிகளை இயந்திரத்தனமாக பயன்படுத்த முடியாது. குற்ற வழக்குத் தொடர தேவையான ஆவணங் களை வழங்க அரசு மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் தந்தை காணாமல் போய்விட்டார். தந்தையை நாங்கள் தேடி வந்த நிலையில் அவர் பெயரில் அக். 6இல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் எனக்கும், எங்கள் குடும்பத்தின ருக்கும் எதிரான வகையில் எழுதப்பட்டிருந்தது. என் தந்தை பெயரில் போலியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதம் அனுப்பிய நபரை கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக அக்.6இல் ஆர்எம்எஸ் அஞ்சலகத்தின் சிசிடிவி காட்சிகளை கேட்டு ஆர்எம்எஸ் மூத்த கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். அதை தருவதற்கு அவர் மறுத்து விட்டார். ஆர்எம்எஸ் வசம் உள்ள சிசிடிவி காட்சிகளை வழங்கினால் உண்மையை கண்டறியவும், தவறான செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணவும் உதவும். எனவே, சிசிடிவி காட்சிகளை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், ”அஞ்சல் கையேட்டில் தெரிவிக் கப்பட்டுள்ளபடியே தகவல்களை வழங்க முடியும். பிற தகவல்களை வழங்க முடியாது. குற்ற வியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் ஒரு கடுமையான குற்றத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி அல்லது கலால் சட்டத்தின்கீழ் குற்றங்களை விசாரிக்கும் கலால் துறை அதிகாரி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேட்டால் மட்டுமே அஞ்சல் அலுவலகம் அல்லது அஞ்சல் பிரிவின் ஆவணங்களை சமர்ப்பிக்கவோ, அதில் உள்ள தகவல்களை வழங்கவோ முடியும்” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒருவரின் உரிமை மீறப்பட்டால் அவர் சட்டப்படியான தீர்வை பெற உரிமை உண்டு. உரிமை மீறலுக்கு காரணமான நபர் மீது சம்பந்தப்பட்டவர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க விரும்பினால் அந்த நபரின் அடையாளத்தை அரசு வசம் உள்ள ஆதாரங் களின் மூலம் கண்டறிய முடியும் என்ற நிலையில், அந்த ஆதாரங்களை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவது அதிகாரிகளின் கடமையாகும்.

இந்த ஆதாரங்களை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்காமல் இருப்பது அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் உரிமையைப்  பறிப்பதாகிவிடும். குறிப்பிட்ட சில சூழல்களில் மட்டுமே தகவல்களை வழங்க மறுப்பது நியாய மானதாக இருக்கும்.

அதன்படி, அஞ்சல் கையேட்டில் உள்ள கட்டுப்பாட்டு விதிகள் செல்லுபடியாகாது. புகார்கள் காரணமாக மனுதாரரின் நற்பெயர் பாதிக்கப்படுவதையும், சிசிடிவி காட்சிகளைப் பெறாமல் புகாரளித்த நபரை அடையாளம் காண முடியாது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. மனுதாரர் கோரிய விவரங்களை ஒரு ‘பென் டிரைவில்’ 2 வாரங்களுக்குள் ஆர்எம்எஸ் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *