சென்னை, அக். 29- நாடு முழுவதும் எஸ்அய்ஆர் நடவடிக்கையை ரத்து செய் வதுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் எஸ்அய்ஆர்-க்குப் பிந்தைய வரைவுப் பட்டியலில் முந்தைய பட்டியலைவிட 97 லட்சத்து 37,832 வாக்காளர்கள் குறைவாக இருந்தனர். இறுதிப் பட்டியலில் 74 லட்சத்து 7,207 பேர் குறைவாக இருந்தனர். சராசரியாகத் தொகுதிக்கு சுமார் 31,655 பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.
‘தி இந்து பிசினஸ்லைன்’ வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் 20 ஆயிரத்துக்கும் குறைவான நீக்கங்கள் ஏற்பட்ட 99 தொகுதிகளில் தவெக 24 இடங்களிலும், திமுக 27 இடங்களிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக நீக்கங்கள் ஏற்பட்ட 69 தொகுதிகளில் தவெ 52, திமுக 11 இடங்களிலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமாக நீக்கம் செய்யப்பட்ட 10 தொகுதிகளில் தவெக வென்றதாகவும், திமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 31 ஆயிரம் பெயர்களும், அதிமுக வென்ற தொகுதிகளில் சுமார் 27 ஆயிரம் பெயர்களும் நீக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கக் கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்திலும், கன்னியாகுமரி, போளூர், திருக்கோவிலூர், பரமத்தி வேலூரில் முறையே 214, 227, 285, 308 வாக்குகள் வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்தன. கொளத்தூரில் 2025 டிசம்பருக்குள் சுமார் 1 லட்சத்து 3,812 பெயர்கள் நீக்கப்பட்டன.
2026-இல் நான் (மு.க. ஸ்டாலின்) 74,202 வாக்குகள் பெற்றேன். வித்தியாசம் 8,795 வாக்குகள். எனவே, எனது வெற்றியைத் தடுக்கும் வகையில் பெருவாரியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம், பஞ்சாப் என 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களின் வரைவுப் பட்டியல்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுக்கு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆட்சேபனைகளைப் பதிந்துள்ளனர்.
‘தி இந்து’ வெளியிட்ட செய்தியில் மேற்குவங்க வாக்காளர் பதிவு அலு வலர்கள் வாக்காளர்களின் கணக் கெடுப்புப் படிவங்களை பார்வையிட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியாகியுள்ள ஆதா ரங்களின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் வரைவுப் பட்டியலில் இடம் பெறாமல் போன 97 லட்சத்து 37,832 பெயர் நீக்கங்களின் சட்டப்பூர்வத்தன்மை, இறுதிப்பட்டியல், தேர்தல் முடிவுகளின் மீதான தாக்கம்குறித்து உச்ச நீதிமன்ற ஆலோசனை பெற வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் எஸ்அய்ஆர் முழுமையாக ரத்து செய்து, பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண் டும். இசிஅய்-நெட், இஆர்ஓ-நெட் குறித்து தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
