முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழ்நாடு  அரசு நிதி ஒதுக்கீடு!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 29-முல்லை பெரியாறு அணைப் பகுதிகளில் நில அதிர்வு குறித்த பிரத்யேக ஆய்வை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

முல்லை பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வுகள் குறித்துச் சிறப்பு ஆய்வு (Site-specific seismic study) மேற்கொள்ள அய்தராபாத்தில் உள்ள அறிவியல், தொழில் ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்அய்ஆர்), தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்அய்) ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.43 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தம் கோருதல் இன்றி, அரசு நிறுவனங்களுக்கு நேரடியாகப் பணி வழங்க தற்போது இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்க அபாயம் உள்ளதாக கேரளா தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டை, அறிவியல் பூர்வமாக முறியடிப்பதே இந்த ஆய்வின் நோக்கம். ஒன்றிய அரசு நிறுவனங்களின் இந்த அறிக்கை தமிழ்நாட்டிற்கு வலுவான ஆதாரமாக அமையும். அணை புவியியல் ரீதியாக பாதுகாப்பாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்த இந்த ஆய்வு உதவும்.

இதன்மூலம், தென் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணை மீதான தமிழ்நாட்டின் உரிமை எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்படும் என்று துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கட்டணக் குளறுபடி

கணக்கீட்டு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்ைன, அக்.29 செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில், நுகர்வோர் ரொக்கமாக செலுத்திய மின் கட்டணத்திற்கு பதிலாக, காசோலை செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட, கணக்கீட்டு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கதுரை. தன் வீட்டு மின் இணைப்பு மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் என, 8 மின் இணைப்புகளுக்கான கட்டணம், 4,038 ரூபாயை, கடந்த 17ஆம் தேதி, செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தியுள்ளார். அதற்கான ரசீது வழங்கப்பட்டதுடன், கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தியும், அவரது செல்பேசி வந்துள்ளது.

இந்நிலையில், 26ஆம் தேதி, 8 மின் இணைப்புகளுக்கு செலுத்திய காசோலையில் பணம் இல்லாததால், அது வங்கியிலிருந்து திரும்பி விட்டதாகவும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவரது செல்பேசி குறுஞ்செய்தி வந்துள்ளது. ரொக்கமாக பணம் செலுத்தியதற்கான ரசீது இருந்தும், மீண்டும் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்ததால், தங்கதுரை அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, மின்வாரிய அதி காரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணை யில், கணக்கீட்டு ஆய்வாளர் அருண்குமார், ரொக்கமாக பெறப் பட்ட பணத்துக்கு பதிலாக, அவரது பணம் இல்லாத வங்கி காசோலையை பயன்படுத்தி மின்வாரிய கணக்கில் செலுத்தியி ருப்பது தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோன்று வேறு நபர்களிடமும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *