விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது அவசியமற்றது!

1 Min Read
- Advertisement -

மேனாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று (26.10.2026), தனியார் பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பான வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைகளுக்கு சட்ட ரீதியாக அவர் முழு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில், இந்தக் கைது அவசியமற்றது.

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர், சிறுமிகள் காணாமல் போகுதல் போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவும், காழ்ப்புணர்வு காரணமாகவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்க முடியாது.

அரசும், காவல்துறையும் கவனம் செலுத்த வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

27.10.2026      

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *