சென்னை, அக்.27- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு பெரியளவில் சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் நிகழ்வுகளால் தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளுங்கட்சியான த.வெ.க.வினரே பெரியளவில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டைப் பாதுகாப்பற்ற மாநிலமாகப் படுகுழியில் தள்ளியுள்ள தவெக அரசைக் கண்டித்து, திமுக மகளிர் அணியின் சார்பில் வருகிற அக்டோபர் 31 (31.10.2026) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
