பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கான பதிவு முறையில் மாற்றம்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23-  பொதுப்பணித்துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்ததாரர் பதிவு முறையை 6 வகுப்புகளில் இருந்து 4 வகுப்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ்அர்ஜுனா வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒப்பந்ததாரர் பதிவு முறை 6 வகுப்புகளில் இருந்து 4 வகுப்புகளாகக் குறைக்கப் பட்டுள்ளது.

அதன்படி, வகுப்பு 1 ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கு மேற்பட்ட பணிகளையும், வகுப்பு 2 ஒப்பந்ததாரர்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலானபணிகளையும் மேற்கொள்ளலாம். இவர்களுக்கான சால்வென்சி தொகை முறையே ரூ.1.50 கோடி, ரூ.75 லட்சம் ஆகும். வகுப்பு 3 ஒப்பந்ததாரர்கள் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளலாம்.

சால்வென்சி தொகை ரூ.15 லட்சம். வகுப்பு 4 ஒப்பந்ததாரர்கள் ரூ.1 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு பதிவு மதிப்பில் 15 சதவீதம் சால்வென்சி தொகையாகவும், அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ரூ.10 கோடிக்கு மேற்பட்ட திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், கொள்முதல் மதிப்பில் 15 சதவீதத்தை மின்வங்கி உத்தரவாதமாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவாதம் பணிக்காலம் மற்றும் பொறுப்புக் காலம் முடியும்வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

மேலும், ஒரே நபர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுவதைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உரிமையாளர், பங்குதாரர்கள், இயக்குநர்கள் அல்லது நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால் பதிவு அதிகாரியிடம் தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும். பினாமி பதிவு, போலி ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பதிவு பெறுவது கண்டறியப்பட்டால், பதிவு ரத்து செய்யப்படுவதுடன் கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புதிய பதிவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், பதிவு மற்றும் வகுப்பு உயர்வுக்கான கட்டணம் ரூ.1 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *