சென்னை, அக்.23 சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்திற்கான உதவித் தொகை உயர்த்தப்பட் டுள்ளது. இதன் மூலம் 1,16,424 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக்கட்டணத்திற்கான உதவித் தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது. இதன்படி, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்திற்கான உதவித் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,16,424 (ஆதிதிராவிடர் நலம் – 91,424 + பழங்குடியினர் நலம் – 25,000) மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ. 29,41,29,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப் பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
