இந்தியாவின் கரோனா பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு…

Viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.24 இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது  125 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில் 23.02.2023 அன்று இந்த எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது. 22.2.2023 அன்று  1 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. தொற்றின் பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் 127 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. தொற்றினால் நேற்று முன்தினம் சண்டிகாரில் ஒருவர் பலியான நிலையில், நேற்று டில்லியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கரோனா பலி மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 763 ஆக உயர்ந்து இருக்கிறது.

கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கையில் நேற்று 65 அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனாவில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில்….

 தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று 12 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நேற்று 4106 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கோவையில் மூவர்; சென்னையில் இருவர்; கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் என 12 பேருக்கு தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஆறு பேர் குணம் அடைந்தனர். 10 பேர் உட்பட 63 பேர் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 48 பேர் கரோனா பாதித்த நிலையில் 45 பேர் குணமடைந்தனர். மூன்று பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *