கிருட்டினகிரி, அக். 22- கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பெரியார் நடை கிருட்டின கிரி நகரில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மிகுந்த எழுச்சியுடன் வெகுசிறப்பாக பெரியார் நடை – சமூகநீதி – சமத்துவத்திற்க்காக உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சமூகநீதி – சமத்துவ பெரியார் நடை கிருட்டினகிரியில் 11/10/2026- ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் நடை
கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய பெரியார் நடை (வாக்கதான்) நிகழ்ச்சி கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிட மணி தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.
கிருட்டினகிரி ஒருங்கிணைந்த திமுக மேனாள் மாவட்ட கழகச் செயலாளர் சீரிய செயல்வீரர் டி.செங்குட்டுவன் பெரியார் நடைப் பயணத்தை திராவிடர் கழக இனமான இலட்சியக் கொடியினை அசைத்து தொடங்கி வைத்து நடைப்பயண நோக்கத்தினை விளக்கி உரை யாற்றினார்.
நிகழ்வில் கிருட்டினகிரி நகர மன்றத் தலைவர் (பொ) சாவித்திரி கடலரசு மூர்த்தி, எஸ் டி பி அய். கட்சியின் மாவட்டத் தலைவர் எச். அஸ்கர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலை வர்கள் தி.கதிரவன், வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம், கி.முருகேசன், மேனாள் மாவட்டத் தலைவர்கள் பெ.மதிமணியன், த. அறிவரசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா. மாணிக்கம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க. அமைப்பாளர் இராம.சகாதேவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனி முத்து. ராஜேசன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் சி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் தொடக்கவு ரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி ஆகியோர் பெரியார் நடை (வாக்கதான்) ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.
புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பெரியார் நடை (வாக்தான்) ஆர் சி பள்ளி சாலை, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வழியாக புதுப்பேட்டை 5 ரோடு இரவுண்டானா, கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் நடைப் பயணம் நிறைவு செய்யப்பட்டது.
பெரியார் நடை தொடக்கம் முதல் நிறைவு வரையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேனாள் மாவட்ட கழகச் செயலாளர் டி. செங்குட்டுவன் கலந்து கொண்டு திராவிடர் கழக இனமான இலட்சியக் கொடியினை ஏந்தி பெரியார் நடையில் சிறப்பித்தார்.
அதிநவீன ஒலிபெருக்கியை வழங்கிய சேலம் சி.பூபதி
தந்தை பெரியார் 148 -ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பிரச்சாரப் பணிக்கு சேலம் சி.பூபதி ரூ 40,000ஆம் மதிப்பிலான அவூஜா கம்பெனியின் அதிந வின ஒலிபெருக்கி (மைக் செட்) பிரச்சாரக் கருவிகளை வழங் கினார். பெரியார் நடைப் பயண நிகழ்ச்சிக்கு முதல்முறையாக மைக்செட் பயன்படுத்தப்பட்டது.
சேலம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் சி.பூபதிக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திமுக மேனாள் மாவட்டச் செயலாளர் டி.செங் குட்டுவன் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
பெரியார் நடை நிகழ்வில் பங்கேற்ற நூற்று இருபத்தைந் திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக தோழர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில திமுக அமைப்புசார ஓட்டுநர் அணிச் செயலாளர் டி.செங் குட்டுவன் பட்டயங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தி, மேனாள் கவுன்சிலர் கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராசரன், சேலம் மாவட்ட கழக மேனாள் செயலாளர் சி.பூபதி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடி யப்பன், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் நா.சிலம்பரசன், இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் ஒன்றியச் செயலாளர் பெ. செல்வேந்திரன், ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், ஒன்றியத் துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ.சரவணன், மத்தூர் ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன், பர்கூர் ஒன்றியச் செயலாளர் ப. பிரதாப், கிருட்டினகிரி நகர தலைவர் கோ.தங்கராசன், மேனாள் நகர செயலாளர்கள் கோ.கருணாநிதி, கோ.மணிகண்டன், நகர பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை நிர்வாகி மா.வேணுகோபால், திம்மராஜ், திம்மாபுரம் ஆர்மி. அன்பு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் கி. உண்ணாமலை, மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, ஜெ. காயத்திரி , பெரியார் பெருந்தொண்டர்கள் ஜி.அன்பரசு,வி.பி. பீட்டர், தருமபுரி சக்திவேல், பொடார். பு.கணேசன், புலியாண்டூர் சி.இராசா, பையூர் வி.சரவணன், பையூர் சிவபிரகாசம், இராமாபுரம் கிளை மு.இரஞ்சித், மாணிக்கனூர் கிளை சி.லோகேஷ், தமிழ் குடிமகன், மா.இரகுநாதன், சே.இராமஜெயம், இளையவேந்தன், மகேந்திரன், மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் செ.வீரபாண்டி, இளைஞரணி கி.கிரி, மாணவர் கழக மு.திலக் மற்றும் பெரியார் பிஞ்சுகள் வெ. மகிழ்நிலவன், இர.ஹன்ஷல்ராஜ், சி.இனியன், மா.ரூபிகாசிறீ, தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக்கனல், மூ.த.சங்க தமிழ், அ.சஞ்சனா, மா.அறிவரசி, மா.அன்புச் செல்வன், மா.அறிவுச்செல்வன், வே.அதியன்,வே.சரித்திரன், ஆ.நிறை தமிழ், ஆ.நிறை கதிர், ஞா.புகழ் மதி, ஞா.சுகன், பையூர் அ.பூர்விகா, லோ. இனியன் உட்பட பெரியார் பெருந்தொண்டர்கள் முதல் பெரியார் பிஞ்சுகள் வரை நூற்றுஇருபத்தைந்திற்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும், சமூகநீதிச் சிந்தனையாளர்களும் பெரும் திரளாக பெரியார் நடை யில் பங்கேற்றுப் சிறப்பித்தனர்.
சமூகநீதி – சமத்துவம் படைக்க பெரியார் கொள்கை வழி நடப்போம்!…. சமூகநீதி காப்போம்! சமத்துவம் படைப்போம்!…. என ஒளி முழக்கங்களை பெரியார் நடையில் எழுப்பி வந்தனர்.
கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், தோழர்களும், பெரியாரிய உணர்வாளர்களும், சமூகநீதிச் சிந்தனையாளர்களும் திரளாக பெரியார் நடைப்பயணத்தில் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.
புதிய தோழர் அறிமுகம்
கிருட்டினகிரி பழைய பேட்டையில் பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் சுவ ரெழுத்து மூலம் கண்டறியப் பட்ட கிருட்டினகிரி மேல் தெரு பகுதியை சேர்ந்த பெரியாரிய உணர்வாளர் வி.பி. பீட்டர் மாவட்டத் தலைவர் கோ.திரா விடமணி தலைமையில் இயக்கத்தில் இணைந்தார்,
அவருக்கு மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் சால்வை அணிவித்து இயக்கத்தில் இணைந்ததை வரவேற்றுச் சிறப்பித்தார்.
பெரியார் நடைப்பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு கிருட்டினகிரி நகர மன்றத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி குடும்பத்தினர் சார் பில் அனைவருக்கும் காலை சுவையான சிற்றுண்டி வழங்கப் பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது.
நிறைவாக மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார் நன்றி கூறினார்.
