நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன்(antibiotics) சர்க்கரை சேர்வது ஆபத்தா? மகேஸ்வரன் ப

2 Min Read
- Advertisement -

மருத்துவப் பயனாளிகள் சிகிச்சை காலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரை கலந்த உணவுப் பொருட்கள், பானங்கள் எடுத்துக் கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குடலில் வளரக் காரணமாகிறது என அண்மையில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

‘நேச்சர்’ ஆய்வுப் பத்திரிக்கையில் சில நாட் களுக்கு முன் வெளியான இந்த ஆய்வு அமெரிக் காவின் நியூயார்க்கில் உள்ள முக்கிய மருத் துவமனைகளில் புற்று நோய்க்காக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை பெறும் 173 மருத்துவப் பயனாளிகளின் 9,419 வேளை உணவுகள் தொடர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுக்கும் காலத்தில் சர்க்கரை கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது எண்டீரோகாக்கஸ் ஃபேசியம் என்ற குணப் படுத்தக் கடினமான விளைவுகளை உடலில் உருவாக்கும் பாக்டீரியங்கள் குடலில் வளர்வது கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆய்வு 2017-லிருந்து 2022 வரையிலான காலத்தில் நடைபெற்றது. இதில் அவர்கள் உண்ட அனைத்து உணவின் ஒவ்வொரு கிராமும் அளந்து வழங்கப்பட்டது. மேலும் 158 பேரின் மல மாதிரிகளும் 1,009 முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

எந்த வகையான உணவு, என்ன அளவில் எடுத்துக் கொள்ளப்படுகிறது? அது உடலில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது? கழிவாக வெளியேறுவதில் என்ன வேறுபாடுகள் உருவாகின்றன? என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சையின் காரணமாக குமட்டல் உண்டாவதால் மருத்துவப் பயனாளிகள் அவ்வப்போது சில இனிப்புகளை எடுத்துக்கொண்டனர்.

இனிப்பான உணவுப் பொருள்கள் எடுத்துக் கொண்டபோது ஒவ்வொரு 100 கிராம் சர்க்கரை கூடுதலாக எடுத்துக்கொள்ளும் போதும் 24 சதவீதம் குடலின் பாக்டீரிய பன்மைத்துவம் குறைந்தது தெரிய வந்தது. பொதுவாக நம் உணவுக்குடலில் அதிகமாக உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியங்களும், சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியங்களும் இருக்கும். பாக்டீரியப் பன்மைத்துவம் என்பது உணவுக்குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியங்கள் வளர்வதற்குச் சாதகமான சூழல் அதிகரிப்பதைக் குறிக்கும்.

சாதாரணச் சூழலில் அல்லாது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொள்கையில் சர்க்கரையும் கூடுதலாகச் சேர்ந்தால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியங்கள் எண்ணிக்கையைக் குடலில் அதிகரிக்கிறது. இவ்விளைவு மேலும் சிகிச்சையை சிக்கலாக்குகிறது.

இதில் சர்க்கரை என்பது பொதுவாக உணவில் உள்ள முழுமையான சர்க்கரை அல்ல. மருத்துவப் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் ஊட்ட பானங்களும் அடங்கும். இவை பொதுவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுபவையாகும்.

ஒரு மருத்துவப் பயனாளி சிறிதளவு கூடுதலாக அளவில் சர்க்கரை எடுத்துக்கொள்ளும்போதுகூட, அது உயிரிழப்பு விகிதத்தை 12 சதவீதம் கூட்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

இது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு சர்க்கரை தீங்கை உருவாக்குமா என்பது பற்றியான ஆய்வு அல்ல. மாறாக நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை காலத்தில் சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டியது என்பதை மட்டும் இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *