தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகு நடத்த அரசு முடிவு!

- Advertisement -

சென்னை, அக். 22- தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2027 மார்ச் மாதத்துக்கு பிறகு ஒரேகட்டமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை, புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், நகர்ப்புற அமைப்புகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தல் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும் என்பதால், தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நடைபெற வாய்ப்பில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவ டைந்த நிலையில், அங்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் 2027 ஏப்ரல் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணிகளும், விரிவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை வரையறுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு எல்லைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதன்பிறகு வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தேர்தலை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஆகியவையும் தேர்தல் தாமதத்துக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அய்ந்தாண்டு பதவிக் காலம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது. எனவே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மார்ச் மாதத்திற்கு பிறகு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகத்தை சிறப்பு அலுவலர்கள் தொடர்ந்து கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *