குவாலியர், அக்.22–- மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த போதிலும், இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் ‘மன்னர் பாணி’ கலாச்சாரம் புதிதாக துவ்ங்கி உள்ளது தசரா விழாவின் போது ஜோதிராதித்ய சிந்தியா மன்னர் போன்று ஆடை அணிந்து வர ஒட்டு மொத்த மத்தியப் பிரதேச அமைச்சரவையும் காலில் வழிந்து வணங்கிய நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஒரு மக்களாட்சி நாடாகும். கடந்த 1971ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட 26வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்தியாவில் மன்னர் பட்டங்கள் மற்றும் அரசு மானியத் தொகைகள் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டன. இருப்பினும்,ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மீண்டும் ‘மன்னர் பாணி’யை கடைப்பிடிக்கத் துவங்கி விட்டார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காட்சிப் பதிவுகளில், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரை விட பல மடங்கு மூத்த வயதுடைய மத்தியப் பிரதேச அமைச்சர்கள் அரசு அதிகாரிகளும், முதியவர்களும் அவரது காலில் விழுந்து வணங்குகின்றனர்.
சமத்துவத்தை வலியுறுத்தும் மக்களாட்சி மதிப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது என அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “காலில் விழுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?” என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
மின்சாரத் திருடன்
இதற்கிடையில், குவாலியரில் அமைந் துள்ள 400 அறைகளைக் கொண்ட ஜோதி ராதித்யா சிந்தியாவின் ஜெய் விலாஸ் அரண் மனை தொடர்பாக ‘தி சூட்டர்’ ஊடகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த அறிக்கையின்படி, அரண்மனைக்கான மின்சாரக் கட்டணம் குறித்த விவரங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான ஓராண்டு காலத்தில், இந்த மாளிகைக்கு மத்தியப் பிரதேச மின்சார வாரியம் அனுப்பிய கட்டணத் தொகை வெறும் 20 ரூபாய் மட்டுமே ஆகும்.
அருங்காட்சியகம் மற்றும்
விருந்தினர் மாளிகை
200 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், அன்றாடம் வெளிநாட்டு விருந்தினர்கள் வந்து செல்லக்கூடியதுமான இந்த அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சி அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகைக்கான ஓராண்டு மின் நுகர்வு பூஜ்ஜிய யூனிட் என்றும், பில் தொகை தோராயமாக ரூ.10.29 மட்டுமே வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாதாஜி அறக்கட்டளை அலுவல கங்களில் முழு ஆண்டும் சுழியம் (பூஜ்யம்) யூனிட் மின் நுகர்வே பதிவாகியுள்ளது. குடும்பம் தொடர்பான மாடமாளிகைகளின் மின்சார இணைப்புகளிலும் மிகக் குறைந்த அளவே யூனிட்டுகள் அல்லது அதற்கும் குறைவு) நுகர்வு பதிவாகியுள்ளது.
மொத்த மின் கட்டணம்
அரண்மனையில் சுமார் 21 மின் இணைப்புகள் உள்ள நிலையில், அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாகவே ரூ. 20 (இருபது ரூபாய்) மட்டுமே கட்டணமாக வந்துள்ளது.
மறுபுறம், சாதாரண பொதுமக்கள் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங் களைச் செலுத்துவதற்கும், மீட்டர் பழுது மற்றும் விழிப்புணர்வு சோதனைகளை எதிர்கொள்வதற்கும் படாதபாடு பட்டு வரும் நிலையில், இத்தகைய மாளிகைகளுக்கு இவ்வளவு குறைந்த கட்டணம் வருவதை சுட்டிக்காட்டி “மகாராஜாக்களுக்கும் சாமானியர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தால் மட்டுமே விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் மிகப் பெரிதாக வெடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜீது பட்வாரி உள்ளிட்டோர் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், “400 அறைகள் கொண்ட மாபெரும் அரண்மனைக்கு மின் கட்டணம் வெறும் ரூ. 20-ஆக இருப்பது மிகவும் வினோதமானது மற்றும் சந்தேகத்திற் குரியது” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களாட்சி நாட்டில் அதிகாரமும் பாரம்பரியமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு சான்றாக மாறியுள்ளதுடன், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.
