பெருந்துறை செவிலியர் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை தேவை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 22- பெருந் துறை செவிலியர் வழக்கில் நேர்மையான விசாரணை தேவை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

காவல்துறை அலட்சியம்

பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், அய்ந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

பெண்களுக்கு அண்ண னாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *