
கோவை, அக்.19 கோவை காந்திபுரம் பகுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் கடந்த 16.10.2026 இல் திறந்து வைக்கப்பட்டது.
பெரியார் அறிவுலகம் முன் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகில் நேற்று (18.10.2026) காலை 11 மணி அளவில் கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழகத் தோழர்கள் அணிதிரண்டு கொள்கைக் குடும்பங்கள் மகிழ்ச்சியோடு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நடந்த கொண்டாட்டம் தொடர்ந்து, ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ புத்தகம் வழங்கி மகிழ்ந்தனர்.
பெரியார் அறிவுலகம் சிறப்பு
கோவையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் மேனாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே ‘‘முதல் நூலகம் – அறிவியல் மய்யம்..’’ ஒருங்கே அமை யப்பெற்றுள்ளது இந்த பெரியார் அறி வுலகம் ஆகும். இதில் எட்டுத் தளங்கள் அமைந்துள்ளன.
இதில் ஆங்கிலம் , தமிழ் நூலகங்கள், இன்குபேஷன் சென்டர், டிஜிட்டல் லைப்ரரி மற்றும் கோளரங்கம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பெரியார் அறிவுலகத்திற்கு ஒரு குழந்தை உள்ளே வந்தால், அடிப்படை அறிவியல், வரலாறு, உயிரியல் உள்பட அனைத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு ராக்கெட்டில் அமர்ந்து செல்லும் பொழுது எந்த உணர்வு வருமோ அது போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கி றது.
ஒரு சிறுமிக்கு ஸ்பேஸ் ட்ராவல் என்ன என்பதை உடனே புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (துபாய் மியூசியத்தில் உள்ள அந்த மாடல் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது).
கட்டட வடிவமைப்பு
பெரியார் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ள, இவ்வளவு சிறப்பாக பிரமாண்டமாக உருவாகியுள்ள பெரியார் அறிவுலகக் கட்டடத்தை வடிவமைத்தவர் கட்டடக்கலை நிபுணர் பொன்னி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் இளையதலைமுறையினர் முன்னேற்றத்திற்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இளைய தலைமுறையினர் இதைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும்!
அனைத்து அறிவியல் சிந்தனை களும், மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்; அறிவார்ந்த மக்கள் பெரு கட்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும்; அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், கழகத் தோழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது
‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!
முன்னதாக, ‘திராவிட மாடல் நாயகர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க!’ ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க!’ ‘தந்தை பெரியார் வாழ்க!’, ‘தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க!’ என வாழ்த்து ஒலி முழக்கங்களை மகிழ்ச்சியோடு கழகத் தோழர்கள் முழங்கி, நன்றி தெரிவித்தனர்
நிகழ்வில் பங்கேற்றோர்
கோவை மாவட்டச் செயலாளர் ஆ.பிரபாகரன், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர் கா.சு ரங்கசாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ப.குமரவேல், பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, பேராசிரியர் முனைவர் தவமணி, ப.க. மாநில அமைப்பாளர் தரும.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்பரசு, மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி, குனியமுத்தூர் நகர செயலாளர் வே.தமிழ்முரசு, பொதுக்குழு உறுப்பினர் இல.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தொழிலாளர் அணி செயலாளர் ஆர்.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ராஜா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் த.க.கவுதமன், ச.திலகமணி, தி.ச யாழினி, த.கவிதா, வ.ராஜேஸ்வரி, கழகச் சொற்பொழிவாளர் இரா.அன்புமதி, அ.மு.ராஜா, கி.திராவிட எழில், வெ.சாவித்திரி, வீ.சகாயமேரி, வடவள்ளி பகுதிக கழகத் தலைவர் ஆட்டோ சக்தி, பீளமேடு பகுதி தலைவர் பு.முருகானந்தம், கணபதி, பகுதி கழகச் செயலாளர் திராவிடமணி, ப.க. ஆடிட்டர் ஆனந்தராஜ் , பழனியப்பன், முத்துகணேசன், வேலாண்டிபாளையம் பிரபு, மே.ப.ரங்கசாமி, வெ.பிரபாகரன், லூக்காஸ் பீட்டர், மேட்டுப்பாளையம் தமிழ்மணி, அ.அறிவுமணி, இரா.வெற்றிச்செல்வன், கு.திலீபன், பொள்ளாச்சி பிரவின், பொள்ளாச்சி நகர செயலாளர் நாகராஜ் , காளவாய் ஜெயக்குமார், அமான், பெயிண்டர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு:
அ. மு. ராஜா, கோவை
