திருப்பதி ஏழுமலையானுக்கே ‘கோவிந்தாவா?’

- Advertisement -

 மின்சாரம் 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான ‘லட்டு’ தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு மற்றும் கலப்படப் பொருட்கள் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்கள், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையை உலுக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரடி உத்தரவின்பேரில், சிபிஅய் இணை இயக்குநர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு  இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், தற்போது அம லாக்கத்துறை (ED) களமிறங்கி இருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்களின் ஆன்மிக உணர்வோடு விளையாடும் வணிகம்: உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் ‘புனித’த் தலமாக தம்பட்டம் அடிக்கும் திருப்பதியில், ஆண்டவனுக்குப் படைக்கப்படும் பிர சாதத்திலேயே லாப நோக்கில் கை வைப்பது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம்’ என்று கூறுகின்றனர்

இவ்வளவு பெரிய கோயிலில், தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டதா அல்லது அரசியல் மற்றும் வியாபார அழுத்தங்களால் அவை கண்டு கொள்ளாமல் விடப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. உயர்தரப் பொருட்கள் வாங்கப்பட வேண்டிய இடத்தில், மலிவான கலப்படப் பொருட்கள் புகுத்தப்பட்டது நிர்வாகத்தின் கடுமையான கவனக்குறைவைக் காட்டுகிறது என்பதெல்லாம் உண்மையல்ல; பச்சையான ஊழல், ஊழலே!

ஆரம்பத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் விசாரணையாகத் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது அமலாக்கத்துறை வரை சென்றுள்ளமை, இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் முறைகேடுகள், பினாமிகள் மற்றும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறது.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்களே குமுறுகிறார்கள்.

‘‘தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்!’’ என்றெல்லாம் பஜனைப் பாடும் பக்தர்கள், தான் சம்பந்தப்பட்ட ஒன்றிலேயே இவ்வளவு ஊழல் நடக்கிறதே – அதைத் தடுக்க திருப்பதி ஏழுமலையானுக்கு வக்கில்லையே – அதுபற்றிச் சிந்திக்கவேண்டாமா?

இது என்ன! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் நடைபெற்றிருக்கும் ஊழல்களுக்கும், களவாடல்களுக்கும் பஞ்சமா?

மன்னன் கிருஷ்ண தேவராயனும், அவன் மனைவிகளும் ஏழுமலையானுக்குச் சாத்திய நகைகள் கொஞ்சமா, நஞ்சமா? பிங்க் வைரம் உள்ளிட்ட எத்தனை எத்தனையோ நகைகள் ‘மாயமாய்’ மறைந்துவிட்டன. திருப்பதி ஏழு மலையான் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஏ.வி.ரமண தீட்சத்துருலு பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியதுண்டு.

இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தானா – ஏழுமலையான் கடவுள்!

அது ஒரு பொம்மை, அவ்வளவுதான்.

பக்தக் கோடிகள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *