வாயுத் தொல்லை குணமாக எளியவழி!

3 Min Read
- Advertisement -

மருத்துவம்

மருத்துவர் சு.நரேந்திரன்
இரைப்பை, குடல் அறுவைச்
சிகிச்சை நிபுணர், தஞ்சாவூர்.

மனிதனுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளில் வாயு தொல்லையும் ஒன்று.இரைப்பை மற்றும் குடலில் குறைந்த அளவே வாயு உள்ளது. உணவு உண்ணும் போதும்,நீர் அருந்தும் போதும் அதிகமான காற்று குடலின் உள்ளே செல்கிறது.இவ்வாறு உட்கொள்ளப்படும் காற்றுகுடலின் உள்ளேசெல்கிறது. இவ்வாறு உட்கொள்ளப்படும் காற்று வயிற்றின்கொள்ளளவுக்கு அதிகமாகும் போது ஏப்பமாக வெளியேறுகிறது.

ஏப்பம்

அடுத்து உட்கொண்ட உணவு வயிற்றினுள் புளிப்படைந்தாலும் ஏப்பம் உண்டாகும். இதைப் புளித்த ஏப்பம் என்றும் கூறுவார்கள். இது வயிற்றின் அதிக அமில சேர்க்கையால் உண்டாவதாகும்.

இதேபோல் குடலில் புண் உள்ளவர்களுக்கு செரிமானமின்மை ஏற்படும். இதன் காரணமாகவும் அடிக்கடி ஏப்பம் வரும்.

நுரை அதிகமாக உள்ள பானங்கள் சோடா, பீர், மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை காரணமாகவும் அடிக்கடி ஏப்பம் ஏற்படும். நேரம்தவறி உணவு உட்கொள்வதாலும்ஏப்பம்ஏற்படும் கவளம் கவளமாக உணவை விழுங்குவதாலும், உணவு உண்ணும்போதுஅடிக்கடிதண்ணீர்அருந்துவதாலும்ஏப்பம் உண்டாகும். இதை போல் மூக்கினால் சுவாசிக்காமல் வாயினால் சுவாசிப்பவர்கள் அதிக காற்றை உள்வாங்குவார்கள் அதன் காரணமாகவும் ஏப்பம் வரும். ஆனால் எந்த நிலையிலும் காற்றை உட்கொள்வதும் அதை வெளியிடுவதும் நல்ல பழக்கம் இல்லை.

சோடா

சிலர் வயிற்றில் வாயுஅதிகமாக இருக்கிறதுஎன்றுசோடாவைகுடிப்பார்கள். சோடா குடிப்பதால் வயிற்றில்  வாயு அதிகமாகிறதே தவிர குறைவது இல்லை. வயிற்றில் காற்று இருப்பதை உணரும் சிலர் வெளிக்காற்றை விழுங்கினால் வயிற்றில் உள்ள காற்று எல்லாம் வெளிவந்துவிடும் என்ற நினைப்பில் காற்றை விழுங்குவார்கள் ஆனால் இதற்கு மாறாக காற்று உள்ளே தங்கி விடுமே தவிர வெளியில் வராது.

சரியாக சமைக்காத உணவு, நார்ப்பொருள் அதிகம் உள்ள உணவு, மாவுச் சத்துள்ள உணவுப் பருப்பு வகைகள், மீன், முட்டைக்கோசு, வெங்காயம், காலிபிளவர், முள்ளங்கி, வெள்ளரி, கிழங்கு வகைகள் ஆகியவை வயிற்றில் வாயுவை உண்டாக்கும். இதன் காரணமாக ஏப்பமும், மலம் கழிக்கும் போது வாயு பிரிதலும் இருக்கும்.

இந்த அறிகுறிகளை ஆப்பிள் திராட்சை வாழை முதலிய பழ வகைகளும் உண்டாக்கும்.

சாதாரணமாக குடலில் காற்று உண்டாகும் போது நாற்றம் இருக்காது. ஆனால் இது வெளியேறும் போது நாற்றம் இருக்கும்.  இக்காற்றில் ஹைட்ரஜன், கரிமிலவாயு, மீதேன், பிராணவாயு போன்ற வாய்வுகள் இருக்கும் இந்த வாய்வுகள் கெட்ட நாற்றம் உண்டாக்காதவை. ஆனால், குறைந்த அளவே உள்ள அம்மோனியா, ஹைட்ரஜன், சல்பேட்குன்டால், மெர்கார்ப்டேன் போன்றவை கெட்ட நாற்றத்தை உண்டாக்குகின்றன.

வலிபோக்கி மருந்து

நமது நாட்டில் அமீபா ஒட்டுண்ணி மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வகை ஒட்டுண்ணிகள் வயிற்றில் காற்றையும் உப்புச் சத்தையும் உண்டாக்க வல்லன. வயிற்றில் அதிகமாக அல்லது குறைவாக அமிலம் இருந்தாலும் வாயு அதிகமாகும். மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் ஆஸ்பிரின் போன்ற வலி போக்கி மருந்துகள் சாப்பிட்டாலும் வயிற்றில் வாயு உபத்திரவம் அதிகமாகும். மனநோய் உள்ளவர்கள் அடிக்கடி காற்றைக் குடிப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக ஏப்பம் விடுவார்கள். இவர்களுக்கு மருந்து தேவையில்லை. மனநல மருத்துவரே தேவை.

தடுப்பு முறைகள்

உணவை கொஞ்சம் கொஞ்சமாக அதிக தடவை உண்ண வேண்டும்.உணவு உட்கொள்ளும் போது நீர் அருந்தக் கூடாது. தண்ணீர் அருந்தினால் வயிறு பெருத்து செரிமான கோளாறுகள் ஏற்படும். உணவை சரியான இடைவெளிகளில் உண்ண வேண்டும். நுரை வரக்கூடிய சோடா, பீர், மில்க் ஷேக் போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.

உணவில் தீட்டாத அரிசியும், முழுக்கோதுமை மாவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த உணவுகள் குடலில் அழுக நேரிட்டால் வேண்டாத காற்றை உண்டு பண்ணும். எனவேதான் அசைவ சமையல் உடன் இஞ்சி, பூண்டு,மிளகு முதலியவற்றை நமது தாய்மார்கள் சேர்க்கிறார்கள். இறைச்சியை நீராவியில் வேகவைத்து மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்க வேண்டும்.பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. என்றாலும் அதிக அளவு சாப்படுவது உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். உணவு அருந்தும் போது உடைகள் தளர்ந்து இருக்க வேண்டும். உணவு அருந்திய பின் காலாற சிறிது நேரம்  நடக்க வேண்டும். இது போலவேதான் பிறந்த குழந்தையை கூட பாலூட்டிப் பிறகு தாய் தன் தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்து பாலுடன் விழுங்கிய காற்றை வெளியேற்றிய உடன் தான் படுக்கையில் கிடத்த வேண்டும். இல்லையேல் படுக்கையில் போட்டவுடன் ஏப்பத்துடன் பாலும் வாந்தியாக வெளிவரும் என்பது கண்கூடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *