தருமபுரியில் குடும்ப விழா – வினாடி வினா

3 Min Read
- Advertisement -

தகடூர் தமிழ்ச்செல்வி

இ.டபிள்யூ.எஸ். குறித்து
குடும்ப விழாவில் குழு விவாதம்

கடந்த 20.9.2026 அன்று கிருஷ்ணகிரி கழக மாவட்டம் மத்தூர் ஒன்றிய கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் குடும்ப விழா நடைபெற்றது.

நிகழ்வில் மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் ,பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

குழு விவாதம்

இ.டபிள்யு.எஸ். (EWS) – பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சலுகை  என்ற தலைப்பில்  குழு விவாதம் நடைபெற்றது.

2019 ஆண்டு நடைபெற்ற எஸ்.பி.அய். (SBI) வங்கியில் எழுத்தர் பணிக்கான நுழைவுத் தேர்வில்,

திறந்த போட்டியாளர்களுக்கு கட் ஆப் பதிப்பெண் 61.25

27% பிற்படுத்தப்பட்ட போட்டியாளர் களுக்கு 61.25

15% பட்டியல் சமூக போட்டியாளர் களுக்கு 61.25

7.5% பழங்குடி சமூக போட்டியாளர் களுக்கு 58.75

ஆனால் 10 சதவீத EWS ஒதுக்கீடு பெற்ற பார்ப்பன உயர் ஜாதியினருக்கோ கட் ஆப் மதிப்பெண்கள் 28.75

இது குறித்து கருத்து தெரிவிக்க விழாவில் பங்கெடுத்த மாணவர்களிடம் கேட்கப்பட்டது.

அவர்கள் தெரிவித்த கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.

தரணி

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் ஜாதியினருக்கு 10% ஒதுக்கீடு என்பது இந்திய விதிமுறை அல்ல. சட்டத்தில் இந்த குறிப்பிட்ட விதிமுறை இருந்தால் மட்டுமே பொருந்தும்.

அகரன்

பொருளாதார அளவுகோல், ஆண்டுக்கு  ரூபாய் 8 லட்சம் என்று வைத்திருப்பது ஒரு மிகப்பெரிய சமூகஅநீதி.

இந்த கணக்கின்படி பார்த்தால் 66,000 தனது மாத ஊதியமாக வாங்குகிற ஒருவர் எப்படி ஏழை ஜாதி ஆக இருக்க முடியும்?

சா.லாவண்யா

இன்னும் இட ஒதுக்கீடு இருக்க வேண் டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

திருப்பதி

ஜாதி மத வேறுபாடின்றி அனை வருக் கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

கலந்து கொண்ட
மகளிர் தோழர் ஒருவர்

காலம் காலமாக படிக்க வாய்ப்பு நிறைய உள்ள பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது.

எம்.எஸ்.லோகேசுவரி

திறந்தவெளிப் போட்டியில் அனை வரும் போட்டியிடலாம் என்ற நிலையில் எந்த ஒரு மாற்றமும் இருக்கக் கூடாது.

51.5 அப்படியே தொடர வேண்டும்.

ப.அன்பு

இந்தியாவில் இப்போது நடக்கின்ற அரசியல் பிராமண அரசியல்.

இந்தியாவில் இந்திய அரசியல் நடக்கவில்லை இந்துத்துவ அரசியல் தான் நடைபெறுகிறது.

உயர் ஜாதி இட ஒதுக்கீடு என்பது ஆர்.எஸ்.எஸ்.-சின் சூழ்ச்சி.

இறுதியாக அந்த மாணவர்களுக்கு தகடூர் தமிழ்ச்செல்வி விளக்கவுரை அளித்தார்.

இ.டபிள்யூ.எஸ். (EWS) என்பதே இங்கே மாணவர் சுட்டிக்காட்டியது போல ஒரு இந்துத்துவ அரசியலில் ஒரு தீய சூழ்ச்சி.

கத்தி இன்றி ரத்தம் இன்றி எந்த ஒரு போராட்டமும் இன்றி பார்ப்பனர்களுக்கு,

யானை போட்ட மாலையாய் வந்தது தான் உயர் ஜாதி இட ஒதுக்கீடு.

28.75 க்கு மேல் 61.25 க்கு கீழ்  எடுத்த பார்ப்பனர்கள் எல்லாம், வேறு வேறு வேலைகளில் அமர்ந்து விட்டார்கள்.

61.24 எடுத்த பட்டியல் சமூகத் தோழரோ, பிற்படுத்தப்பட்ட  சமூகத் தோழரோ தனியார் கம்பெனிகளுக்கு செல்ல முடியாது. தனியார் கம்பெனிகளில் உயர் ஜாதி ஆதிக்கம் தான் இருக்கும்.

இந்த 10% உயர் ஜாதி ஏழை இட ஒதுக்கீட்டில் ஒரு பட்டியல் சமூகத் தோழரோ, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தோழரோ ,பட்டியல் பழங்குடியினத் தோழரோ போட்டி போட முடியாது. அதாவது ஏற்கெனவே இட ஒதுக்கீட்டு பட்டியலில் இருக்கின்ற போட்டியாளர்கள் இதில் போட்டி போட முடியாது.

தங்களை விட குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஒரு பட்டியல் சமூகத் தோழருக்கோ, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழருக்கோ வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், தகுதி திறமை போய்விட்டது என்று கூச்சலிட்ட பார்ப்பனர்கள், இப்பொழுது வாயை பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்.

இதைத்தான் தந்தை பெரியார், பாபா சாஹேப் அவர்கள் Conspiracy of silence அதாவது கள்ள மவுனம் என்று கூறுவார்.

நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இதனை பல கூட்டங்களில் அவருடைய பேச்சுக்களின் போது சுட்டிக் காட்டி இருக்கிறார் என்று விளக்கவுரை ஆற்றினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *