நீதிக்கட்சி அரசால் பணியாளர் தேர்வாணையம் தொடங்கப் பட்ட நாள் இன்று (18-10-1929)
மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட நீதிக்கட்சி கொண்டு வந்த அடிப்படை கட்டமைப்புகளில் முக்கியமானது, 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாளில் நீதிக்கட்சி ஆட்சியில் (சட்டமன்றச் சட்டம் மூலம்) அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டதாகும்.
அரசுப்பணிக்கான வேலைவாய்ப்பில் இந்தியா விற்கே வழிகாட்டிய கட்சி நீதிக்கட்சி ஆகும்.
1929-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத் தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது. முதலில் தலைவர் உட்பட மூன்று பேர் கொண்ட அமைப்பாக இருந்தது. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957 இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது. இதன் மூலமாகவே அரசுத் துறைகளில் அடி மட்ட த்தில் இருந்து உயர்மட்டம் வரை பணியாளர்கள் முதல் அலுவலர்கள் வரையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாகப் பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.
ஒவ்வோரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாகத் துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களைக் கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத் திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியி டங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு, அந்தப் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அரசுப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததைச் சரிசெய்யவும், பல்வேறு சமூகத்தினருக்கும் சமூக நீதியை நிலைநாட்டவும் இந்த ஆணையத்தை அமைக்க நீதிக்கட்சி அரசு முனைந்தது.
இதற்கு முன்னதாக, 1924 ஆம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவையால் (நீதிக்கட்சியின் அமைச்சரவை) பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Board) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த வாரியம்தான் 1929 இல் பொதுச் சேவை ஆணையமாக மாற்றப்பட்டது.
1929 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்ட மன்றத்தின் சட்டம் மூலம் இந்த ஆணையம் நிறுவப் பட்டது. நீதிக்கட்சி ஆட்சியின் கீழ், 1921ஆம் ஆண்டிலேயே வகுப்புவாரி ஒதுக்கீட்டை (Communal G.O. அரசாணை எண் 613) அரசுப் பணிகளில் நடைமுறைப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு: 44%
பார்ப்பனர்களுக்கு: 16%
முகமதியர்களுக்கு: 16%
ஆங்கிலோ இந்தியர்கள் கிறிஸ்தவர்களுக்கு: 16%
பட்டியல் இனத்தவர்களுக்கு: 8%
இந்த ஒதுக்கீட்டு முறையைச் சரியாகச் செயல்படுத்தவும், அரசுப் பணிகளுக்குப் பணியாளர் களைத் திறமை, சமூகப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படை யில் நியமிக்கவும் ஒரு நிரந்தரமான, சுதந்திரமான ஆணையத்தின் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாகவே, பணியாளர் தேர்வு வாரியம் விரிவுபடுத்தப்பட்டு 1929 இல் பொதுச் சேவை ஆணையமாக மாற்றப்பட்டது.
இந்தச் செயல்பாடு, அரசுப் பணியிடங்களில் சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் நீதிக்கட்சி ஆற்றிய முன்னோடிப் பணிகளில் மிக முக்கியமானதாகும்.
இன்றளவும் வட இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத மக்களில் பெரும்பான்மையினர் அரசுப்பணிகள் இல்லாமல் உயர்ஜாதியினரின் வஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் 1929 ஆம் ஆண்டே அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைத்து சமூக நீதியை உறுதிபடுத்தியது.
பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று (18-10-1922)
உலகிலேயே மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனமாக இருக்கும் பிரிட்டிஷ் பிராட்காஷ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) இங்கிலாந்தின் லண்டனில் கடந்த 1922 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாளன்று அதிகாரபூர்வமாக வானொலியாக உருவாக்கப்பட்டது.
அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு நாள் இன்று (18-10-1931)
இன்று நாம் பயன்படுத்தும் பல பொருள்களுக்குப் பின்னால் எடிசன் ஒளிந்திருக்கிறார். அவர் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாளில் பிறந்தார். அவர் கண்டுபிடிப்பின் உதவி இன்றி வாழ்வது கடினம். இத்தனைக்கும் அவர் அறிவியலும் கணிதமும் படித்தவர் அல்ல. அறிவியல் மீது இருந்த ஆர்வத்தால் திரும்பத் திரும்ப சோதனைகள் செய்தே கண்டுபிடிப்புக்ளை நிகழ்த்திய அறிவிலாளர். எதையும் கேள்வி கேட்டு, செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்குச் சிறு வயதிலேயே வந்துவிட்டது. எடிசன் சிந்தித்த எதையும் உருவாக்காமல் விடமாட்டார். தனி ஆளாக நின்று ஆயிரக்கணக்கான முறை தோற்று கடைசியாகத்தான் டங்ஸ்டன் இழையைப் பொருத்தினார்.
எடிசன் சிந்தித்த எதையும் உருவாக்காமல் விடமாட்டார். தனி ஆளாக நின்று ஆயிரக்கணக்கான முறை தோற்று கடைசியாகத்தான் டங்ஸ்டன் இழையைப் பொருத்தினார். தன் ஆராய்ச்சியின்போது ஆயிரக்கணக்கான முறை தோல்வி அடைந்தார். ஆனால், ‘உண்மையில் அவை எல்லாம் ஆயிரக்கணக்கான தோல்விகள் அல்ல. அத்தனை ஆயிரம் பொருள்கள் உதவாது என்று கண்டுபிடித்து வெற்றியடைந்திருக்கிறேன்’ என்பார் எடிசன்.
எடிசன் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாளில் தமது 84 ஆவது வயதில் மறைவுற்றார். அவருடைய இந்நினைவு நாளில் அவருடைய புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்!
வானொலியில் தந்தை பெரியார்
திருச்சி அகில இந்திய வானொலியில் தந்தை பெரியார் அவர்களின் செவ்வி (நேர்காணல்) ஒலிபரப்பான நாள் இன்று! (18-10-1973).
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி
