அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படை தன்மை தேவை! உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

மதுரை, அக்.17- கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தோர் யார், அவர்கள் நியமனத்துக்கான காரணம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு. ஆனால் அறங்காவலர் நியமனம் தொடர்பான தகவல்களை அறநிலையத் துறை பொதுவெளியில் வெளியிடுவதில்லை.

அறங்காவலர்கள் தேர்வுச் செயல்முறையில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. அறங்காவலர் நியமனம் இறுதியாகும் முன்பு விண்ணப்பதாரர்களைச் சரிபார்க்கும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. ஆனால், அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விவரங்களை பகிர்ந்துகொள்வதில்லை.

எனவே, அறங்காவலர்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள், அறங்காவலர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் மற்றும் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான உத்தரவு ஆகியவற்றை அறநிலையத் துறை ஆணையரின் வலைதளம் மற்றும் சம்பந்தப்பட்ட கோயில்களின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அறங்காவலர்கள் நியமன உத்தரவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தேதியிலிருந்து மேல்முறையீட்டுக்கான கால அளவைக் கணக்கிடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘‘இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறையின் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *