தலைமைச் செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த
கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம்,
பெரியார் நடை, குடும்ப விழா, பெரியார் கேட்கும் கேள்விகள் புத்தக விற்பனை
கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம்,
பெரியார் நடை, குடும்ப விழா, பெரியார் கேட்கும் கேள்விகள் புத்தக விற்பனை
மன்னார்குடி, அக். 11- தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்திட வேண்டி. 07.09.2026 திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்துள்ள பெரியார் பிறந்த நாள் நிகழ்சிகளான பெரியார் நடையினை நீடாமங்கலத்திலும், பெரியார் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சியினை மன்னார்குடியிலும், தெருமுனைக் கூட்டத்தினை விக்கிரவாண்டி யிலும், பெரியார் பட ஊர்வலத்தினை திருத்துறைப்பூண்டியிலும், பெரியார் நூல் விற்பனையை முத்துப்பேட்டையிலும், அனைத்து ஒன்றியங்களிலும் கழகக் கொடி ஏற்ற வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது அதன்படியே அய்ந்து ஒன்றியங்களிலும் நிகழ்ச்சிகளை பிரித்துக் கொடுத்து மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட மாவட்டம் மன்னார்குடி கழக மாவட்டம்.

27.9.2026 அன்று மன்னார்குடி சிட்டி ஹாலில் குடும்ப விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார்கள். மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தொடக்கத்தில் பாப்பநாடு எஸ்.பி. பாஸ்கரின் பல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் பெரியார் குடும்பங்கள் ஏன் கொள்கை வயப்பட வேண்டும், கொள்கையை முழுமையாக ஏன் உள்வாங்க வேண்டும். என்றும், இன்றைக்கு இருக்கக்கூடிய கால கட்டத்தில் குடும்பம் குடும்பமாய் கொள்கை வகைப்பட்டால் அடுத்து வரக்கூடிய தலைமுறை மிக சிறப்பான எதிர்காலத்தோடு இருப்பார்கள் என்றும் குடும்பத்தில் ஒருவர் மாறுபட்டாலும் அவரின் பணியை பலர் சேர்ந்து செய்ய வேண்டி இருக்கும் அதற்காகத்தான் இந்த குடும்ப விழா என்றும் தமிழ்நாடு முழுவதும் இவ்விழா நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. என்று எழுச்சியுடன் உரையாற்றினார்.

திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் நா.இன்பக்கடல் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன். ப.க.மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் வி.புட்பநாதன், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னார்குடி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி.குமார், நீடாமங்கலம் நகரத்தலைவர் இரா.அய்யப்பன், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு, மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை நகரத்தலைவர் எஸ்.என்.உத்திராபதி, நீடாமங்கலம் நகரத்தலைவர் கி.ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆ.ஜெ.உமாநாத், திருத்துறைப் பூண்டி ஒன்றியத் தலைவர் பொன்முடி, திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், முத்துப்பேட்டை ஒன்றியத் தலைவர் கருணாநிதி, மன்னை ஒன்றியச் செயலாளர் கா.செல்வராஜ் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் க.இராஜேஷ்கண்ணன், இளைஞரணி மாவட்ட மேனாள் துணைத்தலைவர் மன்னை.சித்து, பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி மாணவர் கழக மாவட்டச் செயலாளர் சாருக்கான், கழக நகரச் செயலாளர் அழகேசன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அறிவானந்தம், மகதை எம்.எஸ்.சேகர், மன்னார்குடி சிவா.வணங்காமுடி, தொழிலாளரணி மாவட்டச் செயலாளர் ஆட்டோ மதி ரவி, மன்னார்குடி ஜெ.சம்பத், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கைலை.ஊமைத்துரை, மன்னை ஒன்றியத் துணை செயலாளர் குணசேகரன், மன்னார்குடி வெங்கட்ராமன், வடுவூர் லோகநாதன், ஆசையொளி, கோட்டூர் ஒன்றிய ப.க. தலைவர் .சுருளிராஜன், ப.க. செயலாளர் அ.சுரேஷ், மாணவர் கழகத் தோழர்கள் நீடாமங்கலம் கிள்ளிவளவன், தீபக், பாலாஜி, ப.க. நகரத் தலைவர் வா.சரவணன், ப.க.ஒன்றிச் செயலாளர் க.முரளி மாவட்ட மகளிரணி தலைவர் சரஸ்வதி, மற்றும் பெரியார் பிஞ்சுகள், பெருந்தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார். நிகழ்வில் 165 தோழர்கள் குடும்பமாய் வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கொள்கை உணர்வும், அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது நிகழ்வு இரவு இனிதே முடிவடைந்தது.

பெரியார் பட ஊர்வலம்
– பொதுக் கூட்டம்
– பொதுக் கூட்டம்
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி கழக மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 3.10.2026 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பட ஊர்வலம் மற்றும் சீனிவாச ராவ் மணிமண்டபம் எதிரில் 7 மணிக்கு அளவில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர் சிலையில் தொடங்கிய பட ஊர்வலத்திற்கு நகர மகளி ரணி தலைவர் கி.கலாவதி, நகர மகளிரணிச் செயலாளர், நா.ரேவதி, ஒன்றிய மகளிரணிச் செயலாளர் சு.சித்ரா முன்னிலையில் மாவட்ட மகளிரணித் தலைவர் சி.கலைவாணி தலைமையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலத்தை நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தாரை தப்பட்டை முழங்க பேரணி முக்கிய கடைவீதிகள் வழியாக விண்ணை அதிரும் தந்தை பெரியார் வாழ்க, எங்கள் தலைவர் வீரமணி என்ற இளைஞர்களின் உணர்ச்சி மிகுந்த முழக்கங்களுடன் வந்த பேரணி பெரியார் சிலை வந்தடைந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்ப கடல், மாநில ப.க அமைப்பாளர் சி.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ் அன்பழகன், ப.க மாவட்ட துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, நகரச் செயலாளர் ப. நாகராஜன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.கவிதம்பி, ஒன்றிய துணைச் செயலாளர் ந. செல்வம், நகர துணைச் செயலாளர் சம்பத் குமார், மாவட்ட ப.க செயலாளர் அ.கோபி முன்னிலை ஏற்க ஒன்றியச் செயலாளர் இரா. அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார்.
ஊர்வலத்தை முடித்து வைத்து மாநில மாணவர் கழகச் துணைச் செயலாளர் தேவ.நர்மதா பேசினார். அவர் பேசிய உரையில் பெரியாருக்கு பிறந்தநாள் ஏன் கொண்டாடுகிறோம் ,திராவிட மாணவர் கழகத்தில் மாணவர்கள் ஏன் இணைய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் இளமாறன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் ப.க மாநில அமைப்பாளர் சி.ரமேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். சிறப்புரையாக கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையோடு கடவுளின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.

மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன் பிறந்த நாளை யொட்டி மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சால்வை அணிவித்தார்.
இறுதியாக நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் நன்றி கூறினார்.
கழக மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் கோவி.அழகிரி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், திராவிடர் கழக கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி.குமார்,பகுத்தறிவாளர்கழக கோட்டூர் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் திராவிட மாணவர் அணி மாவட்டச் செயலாளர் ச.சாருகான், மாணவர் கழகத் தோழர் தீபக், நீடாமங்கலம் நகரத் தலைவர் கி.ராஜேந்திரன், நீடாமங்கலம் நகர செயலாளர் இரா.அய்யப்பன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் சதா.அய்யப்பன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோபி பிளாட்டோ, திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரவிக்குமார், திருவாரூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவழகன், திருவாரூர் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அறிவிச்சுடர், மேட்டுப்பாளையம் ஹரிதாசன் பேரணியில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். மேலும் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.மதன், நகர இளைஞரணிச் செயலாளர் ஆ.சந்தோஷ், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சுசி.உமாசங்கர் மற்றும் திமுக, சிபிஅய், சிபிஎம், மதிமுக கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியை நகர இளைஞரணி செயலாளர் ஆ.சந்தோஷ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலை வர் நா.கவிதம்பி, மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.
