டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு: இந்தியா கூட்டணித் தலைவர்கள், தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கவும் கோரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நான்கு அம்ச கோரிக்கை மனுவை அளித்தனர்.
* தேர்தல் வாக்கு திருட்டு: குடியரசுத் தலைவர் மறுக்க வில்லை – ராகுல் காந்தி. வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டை குடியரசுத் தலைவர் மறுக்கவில்லை; ஆதாரங்களைக் கேட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
* நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க நீதியாளர் நவநீதம் பிள்ளைக்கு, பன்னாட்டு குற்றங் களுக்கு எதிரான நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆற்றிய பணிக்காக 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பன்னாட்டு சட்டத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பது தலைவர்களின் தார்மீகக் கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
* டில்லியில் சி.ஜே.பி. இன்று போராட்டம்: கடும் கட்டுப்பாடுகள்: தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சி.ஜே.பி. அமைப்பு போராட்டம் அறிவித்ததால், டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 57 மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன; சில பகுதிகளில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி தேர்தல் ஆணைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு தடைகள்: சிராக் பாஸ்வான் கேள்வி: டெல்லியில் போராட்டத்தை முடக்குவதற்கு எத்தனை ரயில்களை நிறுத்த முடியும் என பாஜக கூட்டணிக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கேள்வி எழுப்பினார். இந்திய இளைஞர்களுக்கு உலகிற்கு வழிகாட்டும் ஆற்றல் உள்ளது; அவர்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசுப் பணிகள், உயர்கல்வியில் ஓபிசி இடஒதுக்கீடு 27%-க்கு தடை; 14% மட்டுமே என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு: மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு 27%-க்கு தடை விதித்து 14% என வரையறுத்த உயர்நீதிமன்றம், நிறுத்திவைக்கப்பட்ட 13% பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டது.
தி இந்து:
* உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34% இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க ஆந்திர அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு: ஒருங்கிணைந்த குடும்பக் கணக்கெடுப்புத் தரவுகள் அதிகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த போதுமானவை அல்ல என உச்சநீதிமன்றம் தெரி வித்தது. 2026 இடஒதுக்கீடு புதிய கணக்கெடுப்பு மற்றும் சிறப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது என ஆந்திர அரசு வாதம் நிரகாரிப்பு.
* தமிழ்நாட்டில் சுடுகாட்டில் ஜாதிப் பிரச்சினை: பி.சி. சமூகத்தினரின் காலில் விழுந்த இரு எஸ்.சி. சமூகத்தினர்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பெரும்பாளி கிராமத்தில் பொதுக் கல்லறையில் இறந்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்ததால் ஜாதிப் பாகுபாடு குறித்த சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
* முதலாளித்துவ ஆதரவு, ஏகபோகத்தை ஊக்குவிப்பதாக மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: மோடி அரசு ஏகபோக நிறுவனங்களை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான போட்டி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு சாதகமான முதலாளித்துவத்தை ஒழிக்க காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
* இடைத்தேர்தல் வெற்றி துரோக அரசியலுக்கு தற்காலிக வெற்றியே – மு.க. ஸ்டாலின்: தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் துரோக அரசியலுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆளும் தவெகவுக்கு எதிராக போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள், பெரும்பான்மை மக்கள் அக்கட்சியை நிராகரித்ததை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* “மக்களுக்கு எதிரான போருக்கான தயாரிப்பு”: டில்லி போராட்டத் தடைகளுக்கு எதிராக அவசர நிலை ஒப்பீடு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்திற்கு முன்பாக டில்லியில் மோடி அரசு விதித்த முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடுகளை மூத்த வழக்குரைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். அரசின் நடவடிக்கைகள் அவசரநிலையை நினைவூட்டுவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “அன்புள்ள பிரதமர் அம்பானி, என்னை மன்னிக்கவும்” – எலான் மஸ்க் கிண்டல்: இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான போட்டி தொடர்பாக, முகேஷ் அம்பானியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் உண்மையான அதிகாரம் அம்பானியிடமே இருப்பதாக கிண்டல் செய்த அவர், ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிக்குமாறு கோரினார்.
– குடந்தை கருணா
