விக்கிரபாண்டியத்தில் தெருமுனைக்கூட்டம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

விக்கிரபாண்டியம், அக். 10- 22.9.2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  மன்னார் குடி கழக மாவட்டம் விக்கிர பாண்டியத்தில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழகத் துணை செயலாளர் வீ.புட்ப நாதன்  தலைமை வகித்தார்.

மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தொடக்க உரையாற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன்,   தந்தை பெரியாரின் சிறப்புக ளையும் கொள்கைகளையும் இளைஞர்கள் தந்தை பெரியாரை ஏன் வாசிக்க வேண்டும், ஏன்  படித்து உள்வாங்க வேண் டும் என்பதை எடுத்து கூறி சிறப்புரையாற்றினார், திராவிடர் கழக பொறுப்பாளர் ஆசைத்தம்பி  நன்றி கூறினார்.

மாவட்ட கழகச் செயலா ளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழகத் துணைத் தலைவர் ந.இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால்,  பகுத்தறிவாளர்கழக நகர தலைவர் கோவி.அழகிரி, கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறி வாளர் கழக கோட்டூர் ஒன்றிய செயலாளர்  இராமலிங்கம், சித்தமல்லி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *