பெரியகுளம், அக். 9- தேனி கழக மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை அண்ணாநகர் என்ற ஆர்எம்டிசி காலனி பொதுமக்கள் இணைந்து நடத்தும் 17ஆம் ஆண்டு முப்பெரும் விழா 20.9.2026 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சமூக ஆர்வலர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மோகன் தலைமையேற்று நடத்தினார்கள். பகுத்தறிவாளர் கழக கீழ வடகரை தலைவர் வே.ஜெயராஜ் வரவேற்புரை ஆற்றினார்கள். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.அன்புக்கரசன், காவல்துறை சார்பு ஆய்வாளர் (ஓய்வு பெற்ற) விஜயராமன், ராணுவ அதிகாரி (ஓய்வு) சீனிவாசகன், அப்பாஸ் பெத்தனசாமி (ஓய்வு), முஸ் தபா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக பெரிய குளம் வளர்ச்சி பேரவைத் தலைவர் வழக்குரைஞர் ஜி.கே.மணி கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனை களை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.எம். கண்ணன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன், எம்.எம்.வி.நந்தகுமார், மணி பூசாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக செந்தில்குமார் (தலைமை ஆசிரியர் ஓய்வு), அன் பழகன் ஆசிரியர் ஓய்வு, பவித்ரா ஆசிரியர் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
அனிபா பிரியாணி உரிமையாளர் பாசித் ரகுமான் மனமுவந்து ஆர்எம்டிசி பொதுமக்கள் மாணவ மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார்.
அவருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் விழாக் குழுவின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
சிலம்பு பயிற்சி ஆசிரியர் தங்க பாண்டியன் தனது மாணவ மாணவிகளுடன் வந்து தமிழ்ப் பண்பாட்டு சிலம்பு விளையாட்டை அனைவரும் பாராட்டும் வகையில் நடத்திக் காட்டினார்.
இது போன்ற விழாக்களில் ஆண்டுதோறும் முழுவதும் பங்கேற்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நிறைவாக ஆசிரியர் முஹம்மது ஜமீல் நன்றி கூறினார்.
30.9.2026 அன்று மாலை 4 மணி அளவில் பெரியகுளம் கீழ வடகரை ஆர்.எம்.டி.சி காலனியில் சமூக ஆர்வலர் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
கீழ வடகரை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜெயராஜ் வரவேற் புரை ஆற்றினார்.
அழகர்சாமிபுரம் கிளை பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இப்ராஹிம் பாஷா முன்னிலை வகித்தார்.
கவிஞர் சி.ராமு எழுதிய நூல்களை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.
பகுத்தறிவாளர்கள் கழகத்தில் புதிதாக ஏழு பேர் இணைந்தார்கள்.
அன்பழகன் (ஓய்வு ஆசிரியர்), செந்தில்குமரன் (தலைமை ஆசிரியர் ஓய்வு), கவிஞர் சிராமு (ஓய்வு), பெத்தண்ணசாமி (ஓய்வு), கவிஞர் நாகநந்தினி (எழுத்தாளர் பெரிய குளம்), நாகேந்திரன் (அரசுப்பணி ஓய்வு), முகமது ஜமீல் (ஆசிரியர்).
இவர்கள் அனைவரும் தந்தை பெரியார் கொள்கைகளையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலையும் ஏற்று பகுத்தறிவுச் சிந்தனையோடு கழகப் பணியாற்றுவோம் என உறுதி கூறி உரையாற்றினார்கள்.
நிறைவாக அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டது. நிறைவாக முஹம்மது ஜமீல் நன்றி கூறினார்.
