மெட்ரோ திட்டத்தில் தி.மு.க.வின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்! தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 09- சென்னை மெட்ரோ திட்டத்தில் திமுக அரசின் இடத்தை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ திட்டம்  கலைஞர் ஆட்சியில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது ஜப்பான் நாட்டின் நிதியைப் பெற்றுத் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் சுணக்கம் கண்ட இரண்டாம் கட்டப் பணிகளை, 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்றதும் விரைவுபடுத்தினோம். ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி 3 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையிலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ரூ.11,762 கோடியும், வெளிநாட்டு கடனுதவி மூலம் ரூ.6,802 கோடி என மொத்தம் ரூ.18,564 கோடியைச் செலவிட்டுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டோம்.

2024 அக்டோபரில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு ஒன்றிய அரசின் நிதி ஒப்புதல் பெறப்பட்டது. இவ்வழித் தடத்தை 2025 இறுதியிலேயே திறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். ஆனால், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தாலும், அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாலும், திட்டமிட்டபடி திறந்து வைக்க முடியாமல் போனது. ஆண்டுக் கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர் வுடன் பெருமை கொள்கிறேன்.

1976-இல் கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தைத் திறக்கும் முன் திமுக அரசு கலைக்கப் பட்டாலும், அதன் வர லாற்றை எவராலும் மறைக்க முடியவில்லையோ, அதே போல சென்னை மெட்ரோ திட்டத்திலும் திமுக அர சின் இடத்தை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *