ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34% இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அமராவதி, அக். 9- ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 34 சத வீதமாக அதிகரித்ததை அம்மாநில உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தக் கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு முதலமைச்சராக உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி கிராமப்புற உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 34 சதவீதமாகவும், நகர்புற உள்ளாட்சிகளில் பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 33.33 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 2 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று (8.10.2026) தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடுகள் அதிரடியாக ரத்து செய்து உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

மொத்த இடஒதுக்கீடு 59 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க கூடாது. ஆனால் இந்த அர சாணை என்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறுவதாக உள்ளது கூறிய உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஆந்திர அரசு பிறப்பித்த 2 அரசாணைகளையும் ரத்து செய்வதாக அதிரடியாக உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி தேர்தல் பணிகள் 6 மாதத்தில் தொடங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்திய பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *