முக்கிய ஆவணங்களின் காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2 முதல் கட்டாயம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக் 08 சென்னை மற்றும் தமிழ்நாட்டில் குடும்ப உறுப் பினர்களிடையே மேற்கொள்ளப்படும் சொத்து உரிமாற்றங்களை எளிமைப் படுத்தும் வகையில், 4 வகையான முக்கிய ஆவணங்களுக்கான காகிதமற்ற (Paperless) பதிவு முறை வருகிற நவம்பர் 2 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலா ளர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

கட்டாயமாக்கப்படும் 4 ஆவணங்கள்:

குடும்ப ஏற்பாட்டு தான செட்டில் மென்ட் பத்திரம், உரிமை விடுதலைப் பத்திரம், பாகப்பிரிவினைப் பத்திரம், தான செட்டில்மென்ட் ரத்து பத்திரம், இந்த ஆவணங்களை இணையவழியே தயாரித்து, அவற்றுக்கான தேவையான துணை ஆவணங்களையும் இணைய வழியாகவே பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவுத்துறை இணையதளம் மூலம் ஆவணம் மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டு செயலாக்கப்படும். பதிவு முடிந்ததும், அந்த ஆவணம் டிஜிட்டல் வடிவில் சம்பந்தப்பட்டோரின் இணையக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, ‘ஸ்டார்’ (STAR) தளத்திலும் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.

நேரடி சரிபார்ப்பு கட்டாயம்

காகிதமற்ற முறை என்றாலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராவது அவசியம். அடையாளத்தை உறுதிப்படுத்தவும், ஆதார் அங்கீகாரத்தைப் பெறவும்  இந்த நேரடிச் சரிபார்ப்பு முறை தொடரும்.

தவிர்க்கப்படும் பணிகள்

ஆவணங்களைக் கையாளுதல், எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல், முத்திரையிடுதல் மற்றும் பக்க எண்கள் இடுதல் போன்ற காகிதம் சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளும் இதன் மூலம் முழுமையாகத் தவிர்க்கப்படும்.

‘ஸ்டார் 3.0’  திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் முதல் கட்டமாக, மனை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களின் முதல் விற்பனைப் பத்திரங்களை எங்கிருந்தும் பதிவு செய்யும் வசதி கடந்த ஆகஸ்ட் 17 அன்று தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ‘ஸ்பிரிண்ட்-1’ திட்டத்தின் கீழும் காகிதமற்ற பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *