ஈரோடு, அக். 08 – பெருந் துறை அருகே பெரும் பாளி பகுதியில் உள்ள பொது இடுகாட்டில் பட்டியலினத் தவரின் இறந்த உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து, காலில் விழ வைத்த காவல் துறையினர் முன்னி லையில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மடத்துப்பாளையம் கிராமத் திற்குட்பட்ட பெரும்பாளி பகுதியாகும். இங்கு பட்டிய லினத்தவர்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு அப் பகுதியில் உள்ள பொது மயானம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் நான்கு கிலோமீட்டர் அப்பால் சென்று திங்களூர் ஊராட்சியின் ஒரு பகுதியில் இறந்த உடல்களை புதைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்களூரை காளியப்பன் என்பவரின் தந்தை சென்னி காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவரது இறந்த உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொது இடுகாடு என்ற நிலையில் ஏற்ெகனவே, ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலும் இருந்து வந்த காரணத்தினால் காவல்துறைக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இறந்த உடல் இடு காட்டிற்கு எடுத்துச் செல் லப்பட்ட நிலையில் காவல் துறையினர், வருவாய் ஆய் வாளர், கிராம ஊராட்சி செயலர், உதவியாளர் உள் ளிட்டோர் அங்கு வந்திருந் தனர். இதைத்தடுத்து அங்கு திரண்டிருந்த ஆதிக்க சக்தியினர், ‘பட்டியலினத் தவர்கள் இங்கே உடலை அடக்கம் செய்ய அனு மதிக்க முடியாது’ என்று அச் சுறுத்தினர். இதனைக் கண்டு அஞ்சிய பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர், ரிதுபரன் என்பவரின் காலில் விழுந்து மன்றாடினர். இவை அனைத் தையும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பார்வையாளராக மட்டுமே இருந்தனர்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.பி. பழனிசாமி, மாவட்டச் செயலாளர் ஏ.கே. பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ஆர். அர்ஜுனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சுந்தர் வடிவேல், ராஜசேகர், லலிதா, பூபால கோகிலா உள்ளிட்டோர் பிரச்சினையில் தலையிட்டு உடலை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
