வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி பெற்றோர் விவரம் தேவையில்லை!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 4- எஸ்.அய்.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி பெற்றோரின் விவரங்களை கட்டாயமாக வழங்கத் தேவையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

படிவம்-6இல் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களைக் குறிப்பிடும் கட்டாய நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 18 வயதான இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க, படிவம் 6-அய் பூர்த்தி செய்து இணைய வழி மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் எஸ்.அய்.ஆர். பணி நடந்தபோது, புதிய வாக்காளர்கள் தங்களின் பூர்வீகத் தொடர்பை நிரூபிக்க, முந்தைய எஸ்.அய்.ஆர். வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி குறித்த விவரங்களை கூடுதல் உறுதிமொழி படிவத்தில் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.

இந்நிலையில், எஸ்.அய்.ஆர். பணிகள் முழுமையாக முடிவடைந்த மாநிலங்களில், 18 வயதான இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது இனி குடும்ப விவரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பழைய நடைமுறையின்படியே படிவம் 6-அய் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், எஸ்.அய்.ஆர். பணி நடக்கும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்போர் இந்த கூடுதல் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

பேரறிவாளன் கடவுச்சீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க

அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, அக். 4- முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கோரி அளித்த விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்குமாறு கடவுச் சீட்டு அதிகாரிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன், விடுதலைக்கு பின் சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கடவுச்சீட்டு கோரி அவர், சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கும், தாம்பரத்தில் உள்ள கடவுச்சீட்டு சேவா கேந்திரத்துக்கும் மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனு பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *