2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்று அன்று மூவர்ணக் கொடி ஏற்றி செங்கோட்டையில் பேசிய மோடி “2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் அது பெருநகரமாக இருந்தாலும், தொலைத்தூர கிராமமாக இருந்தாலும் குடி தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும்” என்றார்.
ஆனால், தலைநகர் டில்லியில் பரவும் ஒரு காணொலியில் சாக்கடை வாய்க்காலில் ஊற்று போன்று இருக்கும் குட்டை ஒன்றில் ஊறியிருக்கும் சாக்கடை நீரிலிருந்து தெளிவான நீரைத் தேடி எடுத்துப் பயன்படுத்தும் கொடூர நிலைக்குத் ஆளாகி உள்ளார்கள். இது ஏழை நாடுகளான ஆப்பிரிக்காவில் கூட பார்க்க இயலாத கொடூரமான காட்சி ஆகும்.
