திருச்சி, அக்.2- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் மன்றம் சார்பில் மாணவ-மாணவியருக்கான அறிவியல் வினாடி-வினாப் போட்டி, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, புதுமை நாட்டம் மற்றும் புத்திக் கூர்மையை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பெற்ற இப் போட்டியை, அறிவியல் மன்றப் பொறுப்பாசிரியர் டி.எம்.மஞ்சுளா மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருந்தார். மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பல அணிகளாகப் பிரிந்து மிகுந்த உற்சாகத்துடன் போட்டியிட்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற பல சுற்றுகளின் முடிவில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் மாணவர்களின் விவரம்:
முதலிடம்: இரா.சுதீப், மா. ஆஷிகா, வே.அஷ்வர்த், ஜெ.திவ்யா சிறீ, வே.பிரவீன், எஸ்.அம்ரீன் பாத்திமா.
இரண்டாமிடம்: மா.மகிழினி, ஈ.ஷாரிகா, மா.முகமது ஹபீஸ், ஈ.தருண் ஜாஸ்.
மூன்றாமிடம்: எஸ்.தக்ஷிதா, மா. கார்த்திகேயா, கே.சிறீஹரி ராம்,
எச்.சிறீ தக்ஷித், எஸ்.யஷ்வந்த்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களைப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா நேரில் பாராட்டி, பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்களும் மாணவ-மாணவியரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
