பகுத்தறிவாளர் கழக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு அவர்களின் வாழ்விணையர், திராவிடர் கழக இளைஞர் அணித் தோழர்கள் இரா. கபிலன், இரா. பேகன் ஆகியோரின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் பா. மலர்க்கொடி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை (01.10.2026) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 1000 நன்கொடையாக நீங்கா நினைவுடன் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.
