அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.01- ‘இஸ்ரோ 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டு களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது’ என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

இந்தியாவின் சொந்த ‘நாவிக்’ என்ற வழிசெலுத்தல் அமைப் பிற்கான 2-ஆம் தலைமுறை செயற்கைக்கோள் என்.வி.எஸ்-03 ஆகும். அமெரிக்காவின் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி – எல்-1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் லட்சிய திட்ட மான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத் திற்காக விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் தாழ்வான புவிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில், அதிக எடை சுமக்கும் திறன் கொண்ட எல்.வி.எம்-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட்டிலிருந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ராக்கெட் தான் எல்.வி.எம்-3 ஆகும்.

இந்த திட்டத்திற்கான 3 சோதனை ராக்கெட்டுகளில் முதல் ராக்கெட் வருகிற நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள்-01 என்பது 35-க்கும் மேம்பட்ட உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இந்திய தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-63 ராக் கெட் மூலம் வருகிற நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

அதிநவீன புவிநிலைத் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் 4.5 டன் எடை கொண்ட ஜிசாட்-என்3 செயற்கைக்கோள் உருவாக்கப் பட்டது. இது, எல்.வி.எம்3-எம்-7 ராக்கெட் மூலம் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது. கடல்சார் அறிவியல் மற்றும் தொலை உணர்வுத் திறன்களை மேம்படுத்துவதற்காக, இஸ்ரோ தயாரித்த இ.ஓ.எஸ்-10 (ஓசோன்சாட்-3ஏ) என்ற இந்திய புவி கண் காணிப்பு செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. என்-1 ராக்கெட் மூலம் வருகிற 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

இதனை தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.வி. எல்-2 ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘விண்வெளி சார்ந்த கண்காணிப்பு-3’ (எஸ்.பி.எஸ்-3) திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆக வருகிற மார்ச் மாதத்திற்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *