சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் தருவதில் அரசு தாமதம் இதுவரை 15 சதவீதத்திற்கு மட்டுமே பதில்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.1 முதலமைச்சர் விஜய் தலைமையிலான, த.வெ.க., அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளில், 15 சதவீதத்துக்கு மட்டும், அரசிடமிருந்து பதில் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., கூட்டணி அரசு பொறுப் பேற்ற பின், முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட், 5ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திட்ட அறிக்கை

அதன்பின், 28 நாள்கள் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், முதல மைச்சரின் 17 அறிவிப்புகள், 51 துறைகள் சார்பாக 1,117 அறிவிப்புகள் வெளி யிடப்பட்டன. அதேபோல, கூட்டத் தொடர் நடந்த காலக் கட்டத்தில், 14,399 கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பி இருந்தனர்.

இதில், பெரும்பாலான கேள்விகளுக்கு, இன்னும் பதில் வரவில்லை என்று கூறப் படுகிறது. இது தொடர்பாக, சட்டசபை அதிகாரிகள் கூறியதாவது:

சட்டமன்றத்தில் 170 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக, 14,399 கேள்விகள் வந்தாலும், அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 12,733 கேள்விகள் தான் அனுமதிக்கப்பட்டன. 1,666 கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட கேள்விகளிலும், 3,455 கேள்விகள் தான் முக்கியமான கேள்விகளாக கருதப்பட்டன. அத்துடன், சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து, புதிய அறிவிப்பு களுக்கான திட்ட அறிக்கை தயார் செய்வ தில், அனைத்து துறைகளும் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அனுமதிக்கப்பட்ட, 12,733 கேள்விகளில், வெறும் 1,800, அதாவது, 15 சதவீத கேள்விகளுக்கு தான் பதில் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தங்களின் தொகுதிக்கு சாலை அமைக்கப்படுமா? மருத்து வமனை அமைக்கப் படுமா என்பது போன்ற கேள்விகள் தான் அதிகம் கேட்கப் பட்டுள்ளன. இதற்கு, விரிவான ஆய்வுக்கு பின் தான் பதில் கொடுக்க முடியும் என்பதால், துறையில் இருந்து பதில் வர தாமதமாவது இயல்பு தான். இருப்பினும், விரைவாக பதில் கொடுக்க, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *