வெயில் எதிரொலியால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தூத்துக்குடி, செப்.30- முத்து நகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித்தலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி மிக முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கருநாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் பதிவாகி வந்தது. ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல், கோடைக்காலத்தைப் போல் வெயில் வறுத்தெடுத்தது. இந்த அதீத வெப்பமான சூழல், உப்பு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது.”
உற்பத்தி அதிகரிப்பு
வழக்கமாக மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீடித்த வெப்பமான வானிலை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் வேகமாக ஆவியாகி, உப்பு படிவங்கள் தடிமனாக மாறின. இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உப்பு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததால், சந்தைக்கு உப்பின் வரத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *