பொத்தனூர் க.சண்முகத்தைக் கழகத் தலைவர் சந்தித்தார்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் வழியில்  பொத்தனூரில் வசிக்கும் 104 வயதான பெரியார் பெருந்தொண்டர் நாமக்கல் மாவட்டக் காப்பாளர் க.சண்முகம் அவர்களை, சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், வாசல் வரை வந்து ஆசிரியர் அவர்களை வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். தி.மு.க. பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆர்.கருணாநிதி, தி.மு.க. வார்டு செயலாளர் தம்பி செல்வராஜ், திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநிலத் துணைத் தலைவர் வீர முருகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ, மேட்டூர் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் அழகன், திருச்செங்கோடு மாவட்டச் செயலாளர் ஆனந்தகுமார் கணேசன், க.ச.செங்குட்டுவன்,  மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சுரேஷ், ம.தி.மு.க. மாவட்ட மாணவரணிச் செயலாளர் ராஜசேகரன், என்.எல்.சி. சிவக்குமரன், பொத்தனூர் நகரத் தலைவர் அன்புமணி மற்றும் காந்தி ஆகியோர் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். திருச்சி பெரியார் மாளிகை தங்காத்தாள், தொழில் நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி. வில்வம் உடனிருந்தனர்.

முன்னதாக, கழகத் தலைவர் பொத்தனூர் க.சண்முகத்துக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். உணர்ச்சிப் பெருக்குடன் பொத்தனூர் க.சண்முகம் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். தனது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரைத் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  மோகனா வீரமணி அவர்கள், கைப்பேசி மூலம் பொத்தனூர் க.சண்முகம் அவர்களிடம் நலம் விசாரித்தார்.   (பொத்தனூர், 29.09.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *