இதுதான் மதச்சார்பின்மையா?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதச்சார்பற்ற அரசின் தொடர்புடைய அலுவலகங் களில், மத சம்பந்தமான எந்த வகையான நிகழ்வுகளும், பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடுகள் நடத்தக்கூடாது, கோயில் கட்டக் கூடாது என 7553/66-2 மற்றும் 3379/L.&OB /91-3 என அரசு ஆணைகள் இருந்தும் அவற்றை அவமதிக்கும் செயலாக தரு மபுரி மாவட்டத்தில் பிற்படுத் தப்பட்டோர் சமூக நீதி (ஒரு சில) மகளிர் விடுதிகளில் குறிப்பாக தருமபுரி அரசு கல்லூரி (பிற்படுத்தப்பட்டோர்) சமூக நீதி விடுதியில் காலை 6 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும், இரு நேரங்களில் வழிபாட்டுக் கூட்டம் (பிரேயர்) நடத்தி அதில் கிறித்துவ, முஸ்லிம் மாணவிகள் உள்பட அனைவரையும் நாள்தோறும் சமஸ்கிருதப் பாடல்களை (எடுத்துக்காட்டு) “சரஸ்வதி நமஸ்துப்யம்” பாடச் செய்கின்றனர்.

முழு ஸ்லோகம்:

சரஸ்வதி நமஸ்துப்யம்

வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

சித்திர் பவதுமே சதா

பத்மபத்ர விசாலாக்ஷி

பத்மகேசர வர்ணினி

நித்யம் பத்மாலயா தேவி

சா மாம் பாது சரஸ்வதி

சரஸ்வதி மஹாபாகே

வித்யே கமலலோசனே

விஸ்வரூபே விசாலாக்ஷி

வித்யாம் தேஹி நமோஸ்துதே

மேற்கண்ட பாடல்களை விடுதி மாணவிகள் அனைவரும் பாட வேண்டும் என்று விடுதிக்காப்பாளர் கட்டாயப்படுத்தி பாடவைப்பதாகத் தெரிய வருகிறது. அனைத்துத் தரப்பு மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் அரசுப் பணியாளர், தனிமனித விருப்பத்தை மாணவிகள் மீது திணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், இனி அரசு சார்ந்த எந்த விடுதிகளிலும் மத சம்பந்தமான வழிபாடுகள் நடத்திடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பதுடன், அனைத்து சமூக விடுதிகளுக்கும் அதற்கான அறிவிப்பை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *